Tuesday, October 29, 2013

லதா புராணம் - 1 - 27

என்னுடைய முகநூல் பதிவுகள் சில :)


--

காலையில் கதவை திறந்து பார்த்த என் மகன், அம்மா வெளியே போய் பாரு. ஒரே மூடு பனி! ஒன்றும் தெரியவில்லை என்று அவசர அவசரமாக பள்ளிக்குப் போக தயாராகிக் கொண்டே சொல்ல, நானும் காமெராவை தேட, கிடைத்து விடுமா, உடனே?

ஹ்ம்ம். கிளம்பு, நேரமாயிடுச்சு என்று சொல்லவும் வெளியில் வந்து காரை எடுத்தால் சிறிது தூரம் வரை தான் தெரிகிறது. பனி மூடி வீடுகளும், தெருக்களும் அழகோ அழகு. மெதுவாக அவனை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டு வரும் வழியெல்லாம் நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் என்று தொடர்ந்த பனியுடன் பயணிப்பதே சுகமாக இருந்தது.

காலை மூடு பனி, 'சில்'லென்ற காற்று, ஹெட் லைட் வெளிச்சத்துடன் வண்டிகள்...காலைப் பொழுதுகளை இனிமையாக்கும் இலையுதிர் காலம்!!!
---------------------------
'கீச் கீச்' என்ற குருவிகளின் சத்தம் காலைப்பொழுதை இனிமையாக நினைவுறுத்தியதும் இன்று ஞாயிற்றுக்கிழமையா அல்லது திங்கட்கிழமையா என்ற குழப்பத்துடன் கீழே வந்து பார்த்தால் ...ம்ம்ம்.

---------------------------

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா, சுவாமிமலை முருகன்.

அம்மைக்கு 'ஜெர்மன்' கத்துக் கொடுக்கும் சின்ன முருகன், என் பையன்.

சரியான உச்சரிப்பு வரும் வரை , உசிரே போகுதே உசிரே போகுதே!

இதில் அடிக்கடி ஸ்பாட்டெஸ்ட் வேறு !!!!

-----------------------

What, no briyani today???? என்று அலறிக்கொண்டே இறங்கி வந்த என் மகனிடம், ஆனால் உனக்கு மிகவும் பிடித்த... என்றவுடன் லிம்பு பொங்கல் (லெமன் சாதம்) என்று ஆனந்தமாய் முகம் மலர வைத்தாயிற்று !


-லதா புராணம் #8


-----------------------------
சிறு வயதில் தமிழ் பேச, புரியாத நாட்களில் யாராவது திட்டினால் அழுது கொண்டே பாட்டியிடம் வந்து முறையிட, அவரும் எல்லாம் ஒனக்குத் தான்-னு சொல்லிடு இனிமே, சரியா என்று சொல்லிக் கொடுத்ததை பல முறை செய்திருக்கிறேன்.

பலர் அதையும் கேலி செய்தாலும் என் மனதில் நீ என்னைத் திட்டியது எல்லாம் ஒனக்குத் தான் என்ற திருப்தி.

எவ்வளவு ஈசியாக பிரச்னைகளுக்குத் தீர்வு சொன்ன பாட்டியை ரொம்பவே மிஸ்ஸிங் :(

லதா புராணம் #10
 
-------------------------

லைப்-ல முதல் முறையா பெயிலாகி நல்லா வாங்கி கட்டிகிட்டேன், என் முருகனிடம்

ரொம்ப மோசமான ஸ்கோர்-னு என் 'ஸ்ட்ரிக்ட்' டீச்சர் சொல்லியதிலிருந்து :(

என் ஜெர்மன் புலமை ரொம்ப மோசமாவே இருந்திருக்கும் போல

லதா புராணம் #11


------------------------

இன்று காலையிலிருந்தே சூரியபகவான் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் போலிருக்கு!

லதா புராணம் #11


----------------------------

பஞ்சுப்பொதிகளின் நடுவில் வைத்த லைட் மாதிரி ஆகாயம் மஞ்சளும் வெள்ளையுமாக - விடிகாலை விண்ணழகு

லதா புராணம் #12


-----------------------------


டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு துணைக்கு தினசரி பேப்பரையும் படிப்பது போன்ற பாவனையுடன்...

பெண்கள் கடக்கும் போது மட்டும் பேப்பரை கீழிறக்கி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு பொழுதைக் கழிக்கும்

வருத்தப்படாத கிழட்டு வாலிபர் சங்கம் உலகெங்கும் கிளைகள் வைத்திருக்கிறது போல.

லதா புராணம் #13
     

-----------------------

இன்னைக்கு நான் வேலைக்கு லேட்டா போறேன்னு சொல்லிட்டுத் திரும்பவும் தூங்கிட்டார்...

சூரிய பகவான்

வாசலைத் தெளிச்சிட்டு என் வேலை முடிஞ்சதுன்னு போயிட்டார்...

வருண பகவான்

லதா புராணம் #14


-------------------

ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டு 'சிக்'கென்று ஏதோ ரேம்ப் வாக் போற மாதிரி கூந்தலை அலையை விட்டுட்டு 'டக் டக்' என்று போன பெண்மணியை என்னைப் போலவே அனைவரும் பிரமித்துப் பார்க்க...

சரி, இந்த அழகுப் பதுமையைப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வேகமாக அவரைக் கடந்து நிமிர்ந்து பார்க்கையில்...

அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா

லதா புராணம் #15


---------------------------

ஹை! வெள்ளிக்கிழமை! என்று தன் செங்கதிர்களை கருமேகங்களுக்கிடையில் பரப்பிக் கொண்டு கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது.

லதா புராணம் #16


-------------------------------

உங்க வீட்டைச் சுத்தி பள்ளம் தோண்டணுமா ?? கூப்பிடுங்க சாமியார, அவர் தங்கம் இருக்குன்னு சொன்னா போதும், மத்திய அரசே இலவசமா குழி தோண்டி கொடுத்துடும்.

உருப்பட்டுடும்

லதா புராணம் #17


----------------------------

அலாரம் வைத்துத் தூங்கி நாளை உயிருடன் எழுவோம் என்று தூங்கும் நாம் அனைவரும் தன்னம்பிக்கையாளர்கள் தான்

லதா புராணம் #18
      
------------------------------

உதிர்ந்து விழும் ஒவ்வொரு இலைகளும் தீபாவளி மத்தாப்பாய் மனதை கொள்ளை கொள்கிறது.

இந்தக் கலரில், ம்ஹும் அந்தக் கலரில், ம்ஹும் இரண்டும் சேர்ந்த கலரில்...

என்ன சேலை - பட்டுச் சேலை, மைசூர் சில்க், கிரேப் சில்க், பார்ட்டி சில்க், பொச்சம்பள்ளி , காட்டன்???...

ம்ம்ம் ...பெண் மனம்!

இதுக்குப் பேரு தான் தீபாவளி ஜுரங்றதோ ??

லதா புராணம் #19


-------------------------

அஞ்சு நிமிஷம், அஞ்சு நிமிஷம், ப்ளீஸ் ப்ளீஸ் என்று தன் விடியலைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார், Mr.Surya

லதா புராணம் #20


-----------------------

ராசி பலன் - பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகரிக்கும்.

மைண்ட் வாய்ஸ் - ம்ம்ம் ...என்னிக்கு இது குறைஞ்சிருக்கு

லதா புராணம்#21


-------------------

ஆளுங்கட்சியாக 'தகதக'வென்று வீறு நடைப் போட்டு உதய சூரியனாய் வலம் வந்து கொண்டிருந்தவரை,

எதிர்க்கட்சிப் போல் உள்ளேன் ஐயா என்று சொல்லி முடக்கி வைத்து விட்டனவே

இந்தக் குளிர்கால மாதங்கள்!

இயற்கையின் அரசியல் !!!!

லதா புராணம்#22


-------------------------

சிறுவயதில் அம்மா, பாட்டி, அப்பாவின் செருப்புக்களைப் போட்டுக் கொண்டு தத்தக்கா,பித்தக்கா என்ற நடந்து,

அம்மாவின் சேலையை கட்டிக் கொண்டு அழகு பார்த்து,

அப்பாவின் சட்டையைப் போட்டுக் கொண்டு கையை மடக்கி விட்டு கம்பீரமாக உணர்ந்த

தருணங்கள் எல்லாம் - priceless

லதா புராணம் #23


---------------------------
மதுரை ரீகல் தியேட்டர் எதிரில் இருக்கும் திருநெல்வேலி அல்வாக் கடையில் வாங்கிய சூடான அல்வாவை காய்ந்த இலையில் வைத்து பேப்பரில் சுருட்டி பார்சல் பண்ணி வீடு வருவதற்குள் எண்ணை வழிந்து,

பார்த்துப் பதமாகப் பிரிக்க, பேப்பரில் ஒட்டியிருக்கும் கொஞ்சூண்டு அல்வாவை முதல் ருசி பார்த்து, ம்ம்ம்ம்ம்ம்ம் என்று இனிக்க, முகத்தில் அரும்பும் முதல் புன்னகை.

இன்னமும் சூடு குறையாமல் இருக்கும் முதல் விள்ளல் நாக்கில் கரைந்து தொண்டையில் வழுக்க, இரண்டாவது புன்னகை.

ஒவ்வொரு விள்ளலும் மனதில் இனிமையாக, முகத்தில் புன்னகையாக,

கண் திறக்கும் நேரத்தில் காலியான அல்வா பொட்டலம் இப்போது என்னைப் பார்த்து சிரிக்க, ஆ!!கண்டேன் அல்வாவை என்று இலையில் ஒட்டியிருக்கும் மிச்ச மீதியையும் ஒட்ட துடைத்துச் சாப்பிட,

ம்ம், திகட்டுவது போல இருக்கே, காரம் வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே மொறுமொறு மிக்சரை சாப்பிட,

இந்தக் காரம் குறைய சூப்பர் பில்ட்டர் காபி அல்லது இஞ்சி, ஏலக்காய் டீ.

அதற்குப் பிறகு வரும் திருப்தி இருக்கே...

priceless

இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு தீபாவளிக்கு, என்ஜாய்!!!!!

லதா புராணம் #24
-------------------------
மின்னலாய்

வந்து போன தென்றல்

சிறுவிடுமுறையில்...

என் குட்டி தேவதை

லதா புராணம் #25
--------------------------
ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் செய்த கறிக்குழம்பு மற்றும் கறி மீதமிருந்தால் எல்லோருக்கும் கிடைக்க,

இரவு உணவை மாடியில் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு கவளமாக அவரும் உருட்டிக் கொடுக்க,

அவ்வளவு சாதமும், குழம்பும், கொஞ்சமே இருந்த கறியையும்

அனைவருக்கும் கொடுத்த திருப்தியில் ஒரு வாய் கூட தனக்காகச் சாப்பிடாத அம்மா -

priceless

நிலவுகள் சேர்ந்து
பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம் !

லதா புராணம் #26
-------------------------
மதுரையில் மஹால், பந்தடி இன்னும் பல ஏரியாக்களில் செக்கர்வடாய், போளியல் என்று சீனி வடை, போளியல் விற்றுக் கொண்டு வருபவரிடம்

அந்த பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய போளியலையும், சீனி வடையையும் வாங்கும் போதே வாயில் எச்சில் ஊரும்.

எண்ணை வழிய, ஏலக்காய் மணக்க,பருப்பும் வெல்லமும் இரண்டறக் கலந்த போளியலை வாயில் சுருட்டி சாப்பிடும் போது இருக்கும் சுகம் இருக்கே!

சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத் தெரியும்

ஓரங்களில் மொறுமொறுவென்று வாயில் வைத்தால் கரையும் சீனி வடை , ஆஹா!

நினைத்தாலே இனிக்கும்!

இப்போது மஹால் 3 தெருப் போளியல்

என்ஜாய் , தீபாவளி!!!!

லதா புராணம் #27
--------------------------
   
      

No comments:

Post a Comment