Friday, February 22, 2019

தக்காளி சூப்

தக்காளி சூப்/ரசம்னு நான் வைக்கிறதெல்லாம் பொடியா நறுக்கின தக்காளி, பூண்டு, மிளகு, சீரகப்பவுடர், மஞ்சள்தூள் , கறிவேப்பிலை, கொத்தமல்லிததழையையும்   சேர்த்து குக்கர்ல நாலைஞ்சு விசில் வச்சு சமைக்கிறது தான்.  இது கொஞ்சம் தண்ணியா ரசம் மாதிரி இருந்தாலும் சுவையாத்தான் இருக்கும்.

இங்க உணவகங்கள்ல தக்காளி சூப்னா கெட்டியா கொஞ்சம் அலங்காரம் கூடுதலோட  சுவையாவும் இருந்தது. நிறைய கிரீம், சீஸ் சேர்த்து பண்ணியிருப்பாங்கன்னு தோணுச்சு. சரி வீட்லேயே பண்ணிப்பார்த்துடலாமேன்னு ரெசிபி தேடியதில் இந்த செய்முறை எளிதாக இருக்கவே பண்ணியும் பார்த்தாச்சு. அதுல சொல்லி இருந்தபடி சீஸ் சேர்க்கலைன்னாலும் சுவையாத்தான் இருந்தது. மிளகும், மஞ்சளும் நான் சேர்த்துக்கிட்டேன். ரெசிபி அளவில் பாதியாக குறைத்து செய்ததில் நான்கு கப் அளவிற்கு வந்ததை இருவேளையாக  சாப்பிட்டாச்ச்ச்ச்ச்சு 😄




https://www.spendwithpennies.com/fresh-tomato-soup/

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...