2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட் மேருவின் மத்திய சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் மனிதர்கள் என்ற வரலாற்றைப் படைத்துள்ளனர். அவர்களின் பெரும்சாதனையை, அனுபவங்களை விறுவிறுப்பாக விவரிக்கும் ஆவணப்படம் தான் 'மேரு' (Meru). நெட்ஃபிளிக்ஸ்ல் வெளிவந்துள்ளது. 30 வருடங்களாகப் பலரும் ஏற முயன்று தோல்வியில் முடிந்த கடினப்பயணத்தை அவர்களுடன் சேர்ந்து நாமும் பயணப்படும் விதத்தில் எடுக்கப்பட்ட மிக அழகான சாகசப்பயணம். நினைத்தாலே பனிக்காய்ச்சல் வந்து விடும் நமக்கு!
எவரெஸ்ட் மலையேறுவதே சாதனை என்று பலரும் அங்குச் சென்று கொண்டிருக்க, இந்த மூவர் மட்டும் உயரமான, செங்குத்தான, கடினமான மலையேற்றத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? அதற்கான பதிலை மலையேறும் பொழுது ஓய்வுநேரத்தில் எடுத்த காணொளியில் அவர்களே விளக்கிக் கொண்டு வருகிறார்கள். இதில் 'ஜிம்மி சின்' என்பவர் இந்த ஆவணப்படத்தின் இணை இயக்குநர். பல நேரங்களில் மலையேற்றப் பயணத்தை அவரே படமெடுத்திருக்கிறார். இரண்டு முறை எவரெஸ்ட் மலையேறிய அனுபவம் கொண்டவர்! ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா.... இப்பவே கண்ணைக் கட்டுதே மொமெண்ட்...
எவரெஸ்டில் இருப்பதைப் போல மேருவில் அதிக சுமைகளைச் சுமந்து வர 'ஷெர்பா'க்கள் இல்லை. சிகரத்தின் உச்சி வரை 200 பவுண்டுகள் எடை கொண்ட மலையேற்றத்திற்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டுச் செல்ல வேண்டும். செங்குத்தான பனிக்கட்டி மலை, கருங்கல் பாறைகளில் ஏறிய அனுபவம் மிகவும் அவசியம். இம்மூவரும் 2008ல் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும் மோசமான வானிலை, உணவுப்பற்றாக்குறை காரணங்களால் சிகரத்திலிருந்து 300 அடிதூரத்தில் திரும்பிவிட்டிருக்கிறார்கள். எத்தனை ஏமாற்றமாக இருந்திருக்கும்?
மலையேற்றத்தில் சாதனை புரிந்த பல வீரர்கள் ஏற முயன்ற மலைச்சிகரத்தை 2011ல் மீண்டும் ஏறி இவர்கள் மூவரும் சாதனை படைத்துவிட்டார்கள்! இதுவல்லவோ விடாமுயற்சி! அதுவும் 'கரணம் தப்பினால் மரணம்' என்பது போல் பல இடங்கள்! அதுவும் அவர்கள் இரவு தங்குமிடங்கள் எல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் தூளி கட்டியிருப்பது போல் மலையில் தொங்கிக்கொண்டிருக்கும் அவர்களது கூடாரம். மலைக்காற்றிலும் பனிப்புயலிலும் ஆடும் பொழுது பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கிறது!
ஏற்கெனவே ஒரு முறை சென்று வந்த அனுபவம் இரண்டாவது முறை செல்லும் பொழுது (2011ல்) கைகொடுத்திருக்கிறது. ஒருவர் முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து இன்னொருவர். மூன்றாமவர் மெதுவாகச் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு என்று மூவரும் ஒருவர் மாற்றி ஒருவர் மாறி மாறி பயணித்து 11 நாட்களில் உச்சியை அடைந்திருக்கிறார்கள்! அவர்களுடன் சேர்ந்து நாமும் கொண்டாடும் தருணம் அது! கீழே இறங்குவது மிகவும் கடினமாம். மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சின் மற்றும் ஆஸ்டர்க் இருவரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள். அவர்களுடைய 2008, 2011 மேரு வரையிலான அவர்களின் பயணங்களைப் படமாக்கியுள்ளனர். கடினமான மலையேறும் பொழுது தூக்கிச் செல்லும் எடையை அதிக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பல தியாகங்களைச் செய்து ஒவ்வொன்றையும் கணக்கிட்டுத் தான் கையில் காமெரா அதற்கு வேண்டிய பொருட்களைச் சுமந்து சென்றிருக்கிறார்கள்.
மூவரில் 'கான்ராட்' என்பவர் 30 வருட கடின மலையேற்ற அனுபவம் கொண்டவர். அவர் வகுத்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்து சாதனை புரிந்த மூவரும் வாழ்க வளமுடன்! மலையேற்ற வீரர்களுக்கு உதவும் வகையில் சிறப்பான ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த மூவரின் தனிப்பட்ட வாழ்க்கைக் கதைகளும் பயணமும் என்று மிக அழகான, சுவாரசியமான ஆவணப்படம்.
நியூயார்க் மாநிலத்தில் பனிக்காலத்தில் அடிரண்டொக் மலையில் உறைந்திருக்கும் பனியில் ஆணி அடித்துக் கொண்டே இறுக்கமாக கயிற்றைக் கட்டிக்கொண்டு மலையேறுபவர்களைப் பார்த்து அரண்டு போயிருக்கிறேன். இவர்களின் 'சில்ல்லிட்ட' பயணமும் சாதனையும் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
இவர்களின் சாகச சாதனைக்கு ஒரு ராயல் சல்யூட்!
Showing posts with label ஆவணப்படம். Show all posts
Showing posts with label ஆவணப்படம். Show all posts
Monday, May 6, 2024
Wednesday, April 26, 2023
Secrets of the Elephants
சிறுவயதிலிருந்தே யானை, குரங்கு, காகம், குருவி, கிளி, நாய், பூனை என்று மனிதர்களோடு பழகும் மிருகங்களைப் பார்க்க மிகவும் பிடிக்கும் எனக்கு. கோவில்களுக்குச் சென்றால் யானையைப் பார்க்காமல் ஆசீர்வாதம் வாங்காமல் வருவதில்லை. அதன் பெரிய கண்களும், தும்பிக்கையும், கால்களும் கம்பீரமாக நிற்கும் அதன் அழகும் பயத்துடன் அதனை நெருங்க வைக்கும். தெருக்களில் யானை வந்தால் குழந்தைப் பட்டாளங்களுக்கு ஒரே குஷி. யானை மீது ஏற ஆசை என்றாலும் அதன் முடி குத்துமே என்ற கவலை. சிறுவயதில் பீதியுடன் ஏறி அழுதுகொண்டே இறங்கியிருக்கிறேன். பாட்டி வீட்டிற்கு அருகில் தெற்கு கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த யானை தும்பிக்கையை ஆட்டிக் கொண்டே புல்லைச் சாப்பிடுவதும் அதனைக் குளிப்பாட்டும் நேரத்தில் தரையில் சாய்ந்து கொண்டும் இருக்கும். பல நேரங்களில் மெதுவாக கதவைத் திறந்து பார்த்து வருவதுண்டு. இப்பொழுது அங்கே யானை இல்லை😔 யானைப்பாகன்கள் சொல்வதை சிறுகுழந்தை போல் கேட்டுக் கொள்ளும். பாண்டிச்சேரியில் காலில் கொலுசு போட்டுக் கொண்டிருந்த யானை கொள்ளை அழகு.
இப்பொழுதெல்லாம் விலங்குகளைப் பற்றின அழகான ஆவணத்தொடர்கள் காண கிடைக்கிறது. தொழிநுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பிப் பார்க்கும் வண்ணம் கவிதை பேசும் காட்சிகளுடன் விலங்குகளை மிக அழகாக படமெடுத்துக் காட்டுகிறார்கள். அறிந்திராத புதிய தகவல்களும் நமக்கு கிடைக்கிறது. அப்படி ஒரு ஆவணத்தொடர் தான் நான்கு பாகங்களாக வெளிவந்திருக்கும் 'Secrets of the Elephants'. 'பூமி தின'த்தை முன்னிட்டு 'நேஷனல் ஜியாக்ராபி' தயாரித்து டிஸ்னி பிளஸ், டைரக்ட் டிவி, ஹுலுவில் வெளிவந்துள்ளது.
நடிகையும் விலங்கின ஆர்வலரும் ஆன நடாலி போர்ட்மென் பின்னணிக் குரலில் முதலில் ஆப்பிரிக்காவில் சவான்னா ஜிம்பாப்வேயில் புல்வெளிப்பகுதியில் வாழும் யானைகளைப் பற்றி ஆரம்பமாகிறது. எத்தனை பெரிய விலங்கினம்! 4 மாதக் குழந்தை அம்மாவின் காலடியில் நடந்து செல்லும் அழகுடன் தண்ணீரைத் தேடி கூட்டமாகச் செல்லும் 30 யானைகளுடன் காட்சி விரிகிறது. இருப்பதிலேயே வயதான பெண் யானை தான் அந்தக் கூட்டத்தை வழிநடத்திச் செல்கிறது. யானைகள் ஒரு முறை கடந்து வந்த பாதையை மறக்காமல் அதனை தலைமுறை தலைமுறையாக கடத்தி விடும் பண்பு கொண்டதாம். வழிகாட்டும் யானைக்கு எங்கு நீர் கிடைக்கும் என்று தெரிந்து வேகமாக அதனை நோக்கிச் செல்ல மற்ற யானைகள் அதனைப் பின்தொடர்ந்து செல்கிறது. வழியில் பெரிய பள்ளம். மணல்பாறை. இறங்குவது சிரமம் என்று தெரிந்தாலும் கொஞ்சம் யோசித்து வேறு வழியின்றி மிக கவனமாக தும்பிக்கையால் ஒவ்வொரு அடியையும் அளந்து இறங்க, மற்ற யானைகளும் இறங்குகிறது. அந்தக் குட்டி யானை தான் கொஞ்சம் சிரமப்படும். அதை முன்னும் பின்னும் அம்மாவும், அம்மாவின் உடன்பிறப்புகளும் கவனமாக வழிநடத்திச் செல்லும். அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டு தண்ணீரைக் கண்டவுடன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டாடும் சத்தமும் அழகு!
பிறகு தண்ணீர் அரிதான 'நம்பிப்' பாலைவனக்காடுகளில் வசிக்கும் யானைகளைப் பற்றியது. மனிதர்கள் வாழ்வதே கடினம்! பாவம் தண்ணீருக்கும் புல்லுக்கும் பல மைல் தூரம் நடந்து கொண்டே இருக்கிறது. இங்கு பிறக்கும் யானைகள் உயிரோடு தப்பித் பிழைப்பதே அரிது என்பதால் யானைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு குட்டியானை கடுமையான வெயிலையும் தாண்டி உயிர்பிழைத்திருக்கிறது. குட்டியானைக்குப் பால் கொடுக்க தாய் யானை அதிகளவில் உண்ணவும் தண்ணீரையும் குடிக்க வேண்டுமாம். தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணும் இலைகளில் இருந்து கிடைக்கும் நீரை வைத்துக் காலத்தை ஓட்டுகிறது இங்குள்ள யானைகள். தண்ணீர் கிடைக்கும் இடத்தையும் அறிந்து வைத்துள்ள யானைகள் ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீரைக் குடிக்கும் உடலமைப்பையும் கொண்டுள்ளது! சுடுமணலில் நடந்து செல்ல அதன் கால்கள் பெரிய பாதங்களைக் கொண்டுள்ளது. சவான்னா யானைகளை விட மெலிதாகவும் இருக்கிறது. பெண் யானைகள் குழுவாக எப்பொழுதும் இருந்தாலும் குழந்தையாக இருந்த ஆண்யானைகள் 14 வயதிற்குப் பிறகு அந்தக் கூட்டத்தை விட்டுத் தனியே சென்று விடுகிறது. அவர்களுடைய வாழ்க்கை கொஞ்சம் கடினமானதாக இருக்கிறது. பாவம்!
மூன்றாவது பாகத்தில் மழைக்காட்டு யானைகளைப் பற்றின குறிப்புகள். சிறிய காதுகளுடன் உருவத்திலும் கொஞ்சம் சிறியதாக மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் யானைகள். உணவுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தந்தத்திற்காக வேட்டையாடுபவர்களால் ஆபத்து அதிகம். ஆனா, பெண் யானைகளுக்குத் தந்தங்கள் இருக்கிறது.
நான்காவது பாகத்தில் ஆசிய நாடுகளில் வாழும் யானைகளைப் பற்றி ஆராய்கிறார்கள். உருவத்தில் சற்றே ஆப்பிரிக்கா யானைகளை விட வேறுபடுகிறது. அவர்கள் வாழ்ந்து வந்த காட்டுகளை அழித்து பனைமரங்களை வளர்த்து வருகிறார்கள் மலேசியாவில். அதனால் மனிதர்களோடு மனிதர்களாக வாழ கற்றுக் கொண்டிருக்கும் வித்தையைக் காண்பித்தார்கள். பனைமரங்களை வெட்டிபி போடும் சத்தம் கேட்டவுடன் கூட்டமாக வந்து சாப்பிட்டு விட்டுப் போகிறது. தாய்லாந்தில் லாரியில் கரும்பு எடுத்துச் செல்லும் நேரத்தில் சரியாக சாலையில் ஆஜராக, சில பல கரும்புகளை அதற்குப் போட்டுவிட்டுச் செல்கிறார் வண்டியோட்டுபவர். இந்தியாவிலும் இந்தக் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் Dr.Paula Kahumbu, யானைகள் பேசிக்கொள்ளும் மொழியை ஆராய்ச்சி செய்யும்
Cynthia Moss பகிர்ந்து கொள்ளும் பல சுவாரசியமான தகவல்களுடன் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் வெளிவந்துள்ளது ஜேம்ஸ் காமெரூனின் இயக்கத்தில் 'Secrets of the Elephants'. கூட்டுக்குடும்பமாக வாழும் யானைகள் பலவும் மனிதனின் பேராசைக்காக உயிரிழக்கின்றன. அதன் குட்டிகளை வளர்த்துப் பராமரிக்கும் அன்பர்கள் அதனைத் தங்கள் குழந்தையாக பாவித்து வளர்க்கிறார்கள். பின்பு காட்டில் அதனை விட்டு விடுகிறார்கள்.ஆஸ்கார் விருது வாங்கிய "The Elephant Whisperers' குறும்படமும் அழகான படம்.
Wednesday, October 24, 2018
The Last Drop - India's water crisis
'The Last Drop - India's water crisis' என்றொரு நேஷனல் ஜியோக்ராபிக் ஆவணப்படமொன்றில் இந்தியாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, நீர்நிலைகளின் இன்றைய நிலை, இனி வரப்போகும் அபாயங்களையும் விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள்
2030ல் 40 சதவிகித மக்கள் நீரின்றி அவதியுறுவார்கள் என்ற அதிர்ச்சிகரமான ஆராய்ச்சித் தகவலுடன் ஆரம்பமாகும் இந்த ஆவணப்படம் வறண்ட ராஜஸ்தானிலிருந்து தொடங்குகிறது. பல மைல்களுக்கு ஒட்டகம் மூலமாக எங்கோ இருக்கும் கிணற்றிலிருந்து குடம் குடமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தண்ணீர் இல்லாததால் பலரும் நகரை நோக்கி இடம் பெயர அங்கும் இதே நிலைமை தான். பல மாடி அடுக்குக்குடியிருப்புகள் ஆற்றுப்படுகையின் மேல் கட்டப்பட்டு நீராதாரத்தை அழித்து வருகிறது. மழைநீர் சேகரிக்கும் வகையில் ராஜஸ்தான் அரண்மனைகளில் கட்டியுள்ள சிறு குளங்கள் இன்று கழிவுகளைச் சுமந்து நிற்கும் அவலங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
குர்கிராம் நகரின் விஸ்தரிப்பும் பல மாடிக்கட்டிடங்களும் நீரில்லாத நகரமாக உருவாகி வருவதையும் , தலைநகர் டெல்லியில் வசதியுள்ளவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கப்படுவதும் அதனால் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காமல் போவதும் குறைந்த நீர் அதிக மக்களுக்குப் போக வேண்டிய சூழ்நிலையில் வெகு தொலைவிலிருந்து எடுத்து வர ஆகும் நேரமும், செலவும் அனைத்து மக்களுக்கும் நீர் சேர முடியாததற்கு காரணங்களாகிறது. டெல்லியில் சங்கம் விஹார் காலனியில் பத்து வீடுகளுக்கு ஒரு குழாய் இருக்கிறது. மக்களும் தண்ணீர் லாரியை நம்பித்தான் இருக்கிறார்கள். குறுகிய தெருக்களும் போக்குவரத்து நெரிசலில் மாட்டியிருக்கும் லாரித்தண்ணீருக்காக காத்திருக்கும் மக்களிடையே எழும் பதட்டமும் சண்டையும் தினமும் நாம் கடந்து வரும் நிகழ்ச்சிகள் தான். இன்று தெருவுக்குள் நடப்பது நாளை நகரங்களுள் பின் மாநிலங்களுக்குள் நடக்கும். இன்றே காவிரி, முல்லைப்பெரியாறு விஷயத்தில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
காடுகளை அழித்து வீடுகள் கட்டி மழையும் பொய்த்ததில் வறட்சி தான் நிலவுகிறது. மலைப்பிரதேசமான சோரா நகரில் மழை பெய்தாலும் சேருமிடம் என்னவோ பங்களாதேஷில். இந்தியாவில் பல்வேறு இடங்களில் நிலவும் உண்மை நிலவரத்தை கவலையுடன் படம் முழுவதும் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.
மும்பையிலிருந்து இரு மணிநேர தொலைவில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு வறண்ட கிணறு பார்க்கவே பரிதாமாக இருக்கிறது. வீட்டுப்பெண்கள் தான் தினமும் பல முறை பல மைல்களுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தண்ணீர் பிடித்துக் கொண்டு வரவே பலதார மணங்களும் நடக்கிறது. எத்தனை கொடுமை? வழி முழுவதும் வறண்ட நிலம் தான்.
பசுமையான பஞ்சாப் மாநிலம் தந்த விளைச்சலில் இந்தியாவில் உணவுப்பொருட்கள் மிகுந்த காலங்கள் தொலைந்து நீரற்ற வறண்ட நிலங்களால் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையும் கூடியுள்ளது. 60 சதவிகித விவாசாயிகள் நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர். ஆழ்துளை கிணறுகளின் மூலம் உலகளவில் அதிகமாக நீரை உறிஞ்சுவதும் இந்தியா தானாம்!
பஞ்சாபில் படிட்ண்டா நகரில் இருந்து 'கான்சர்' ட்ரைனில் ஏறி ராஜஸ்தானுக்கு செல்கிறார்கள்! பயிர்களுக்குத் தெளிக்கப்படும் மருந்துகள் நிலத்திற்குச் சென்று நிலத்தடி நீரை மாசுபடுத்துவது மட்டுமில்லாமல் கான்சரையும் இலவசமாக அளிக்கிறது. படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் இனி எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
தெலுங்கானா மாநிலத்தில் ஃப்ளோரைடு ஆர்சன் கலந்த தண்ணீரினால் உடற்குறைபாடுகள் ஏற்பட்ட குழந்தைகளை காண்பித்தார்கள். என்று எப்பொழுது இவ்விஷயத்தில் விழிப்புணர்வு வரப்போகிறதோ?
தொழிற்சாலை, மனித கழிவுகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆற்று நீரில் கலக்கப்படுகிறது. யமுனை ஆற்றின் கரையோரம் விளைவிக்கும் காய்கறிகளில் நச்சு கலந்த நீரால் அப்பகுதிகளில் விளையும் காய்கறிகளும் அதனை உண்ணும் நமக்கும் பல நோய்களும் வருகிறது என்பதை ஆய்வு செய்து நிரூபித்துள்ளார்கள்.
தொழிற்சாலைகளின் கழிவுகளையும் இறந்த உடல்களையும் சுமந்து கொண்டு புனித நதியாம் வற்றாத கங்கை நதியை இன்று நச்சுக்கிடங்காக்கி வைத்திருக்கிறோம். சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை மற்றும் வீட்டு கழிவுநீர் கங்கை ஆற்றில் கலந்து மாசுபடுத்திய நீரில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் நுண்ணுயிர்களை இழந்து உயிரற்றுக் கிடக்கிறது பெரும்பாலான நீர் நிலைகள் என்று வருத்ததுடன் பகிர்கிறார்கள் இயற்கை மற்றும் மாசு கட்டுப்பட்டு ஆர்வலர்கள்.
பல நதிகளின் ஆதாரத்தை தொலைத்து வீடுகளை கட்டி வீட்டுக்கழிவுகளை அதன் மேல் கொட்டி பிளாஸ்டிக் பைகளும், பொருட்களும் என்று குப்பைகூளங்களாக்கி வைத்திருக்கிறோம். மழை குறைந்து நீரின் தேவை அதிகரித்து நிலத்தடி நீரும் சுத்தமாக உறிஞ்சப்பட்டு தூய்மையான நீர் என்பதே கானலாகிப் போயிருக்கிறது. மனிதர்கள் விலங்குகள் மட்டுமல்ல நம் சுற்றுப்புறச்சூழலையும் இயற்கை வளங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறோம். சென்னை வெள்ளத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டோமா? இல்லை.
மஹாராஷ்ட்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் பருவமழைக்குப் பிறகு வறண்டு விடும் நிலைமையில் இருந்த கிராமத்தில் மக்கள் அனைவரும் 'பானி
ஃபவுண்டேஷன்' NGO துணையுடன் சேர்ந்து பல நாட்களுக்கு நீரைத் தேக்கி வைக்க ஆழ்குழிகள் வெட்டியதில் வறண்ட நிலம் பசுமையாக மாறி இன்று விளைச்சல் பூமியாக மாறி இருக்கிறது. மக்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து சேர்ந்து உழைத்தால் எல்லா மாநிலங்களிலும் இது சாத்தியமே! அடுத்தவரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லாத நிலையும் சாத்தியம் என்று உணர்த்தியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
மலை நகரமான ஐஸ்வால் மிசோராமில் வீட்டுக் கூரைகளைச் சரிவாக கட்டியும் , வீணாகப் போகும் நீரை முறையாகச் சேகரித்தும் தத்தம் தேவைக்கு வீடுகளில் மழை நீரைச் சேகரிப்பதைப் போல் நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றலாம் என்ற நல்வழியை காட்டியுள்ளார்கள்.

அரசாங்கமே செய்யும் என்று காத்திருக்காமல் தங்களின் நீர்த்தேவைகளை குறைத்துக் கொள்ளவும், மழை நீரைச் சேகரிக்கவும் , மறு சுழற்சி முறையில் நீரை மீண்டும் பயன்படுத்தவும் வழிகள் கண்டறிந்து முறைப்படுத்த வேண்டும். அரசாங்கமும் மக்கள் பெருக்கத்தை குறைக்க கடுமையான விதிகளைக் கொண்டு வர வேண்டும். தனி மனிதரும் தத்தம் சமூக பொறுப்புகளை உணர்ந்து நடந்தாலொழிய இதற்குத் தீர்வு இல்லை.
தண்ணீரை நாம் அசுத்தமாக்குகிறோம். அசுத்தமாக்குவதையும் அசுத்தமாக்குபவர்களையும் கண்டு கொள்ளாமல் செல்கிறோம். நஞ்சுத்தண்ணீர் மீண்டும் பழங்கள், காய்கறிகளின் உருவில் நமக்கே நஞ்சாக நம் வீடுகளில் நுழைகிறது.
இதனால் அதிகம் பாதிக்கப்படவிருப்பது அடித்தட்டு மக்களே. நீரின்றி விவசாயம் பெருமளவில் பாதிக்கும். விவசாயிகளும் சிக்கனமாக நீரைப் பயன்படுத்துவதை பாலைவன நாடுகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கானல் நீராகிப் போகும் காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இத்தகைய ஆவணப்படங்களைப் பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துச் சென்று அடுத்த தலைமுறையினருக்கு நீரின் அவசியத்தை , மேலாண்மையை, நிலத்தடி நீரை மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துச் சொல்லவும் செயல்படுத்த வேண்டிய அவசர நிலையிலும் இருக்கிறோம். வங்கிகளில் பணத்தைச் சேர்த்து வைப்பதாலோ சொத்துக்களைச் சேர்த்து வைப்பதாலோ எந்தப் பயனுமில்லை என்பதை மக்கள் உணருவார்களா ? உயிர் வாழ ஆதாரமான நீரின்றி இவ்வுலகு அமையாது என்பதனை என்று நாம் உணரப்போகிறோம்!
Watch it here

Wednesday, June 20, 2018
Naledi
தெற்கு ஆஃப்ரிக்காவில் தந்தத்திற்காக ஒரு பெண் யானையை கொன்றதால் அனாதையான அதன் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளும், தன்னார்வலர்களும் பராமரித்து வருவதை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. நலெடி என்ற அந்த குட்டி யானை பவுடர் பால் குடிக்கும் அழகும் (வேதனையும் தான்
😞 ) , ஆற்று நீரில் புரண்டு விளையாடுவதும், தன்னைப் பராமரிப்பவர்களுடன் கொஞ்சுவதுமாய் குழந்தையாக குதூகலமாக உலா வர, கவனித்துக் கொள்பவர்களும் அன்புடன் சீராட்டுவதைப் பார்க்க நன்றாக இருந்தாலும் வேதனையாக இருந்தது. நலெடி ஓரளவு உடல் தேறியதும் அதை மீண்டும் காட்டில் அதன் குடும்பத்தில் விட, அவர்கள் நலெடியின் அக்கா யானையைக் கூட்டி வர, இந்த குட்டி யானையோ மனிதர்கள் பின்னால் பதுங்கி நிற்க, அவள் அக்காவோ அருகில் வருவதும் பின்னால் செல்வதுமாய் பின்பு ஒரேடியாக மறுத்து காட்டிற்குள் செல்ல... அனைவருக்கும் சோகம். பிறகு ஒரு பெரிய யானைக்குடும்பத்தை அழைத்து வர, அதில் ஒரு குட்டி யானை முன் வந்து துதிக்கையை நீட்ட, தயக்கத்துடன் நலெடியும் தன் தும்பிக்கையை நீட்டி ஒருவருக்கொருவரின் அறிமுகமாய் , நம்பிக்கையை கொடுத்து மெதுவாக அவர்களுடன் சேர்ந்து பெரிய யானைகள் நடுவே காடு நோக்கி நடக்கத் தொடங்க, பராமரிப்பாளர்களின் கண்களில் ஒரே பரவசம். பார்ப்பவர்களுக்கும் தான்! அந்த குட்டி யானைக்கு தீங்கு நேராமல் இருக்கிறதா என்று கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அன்பான குடும்பங்களுடன் அழகாக வாழ்ந்து மலைப்பை உண்டாக்கும் இப்பெரும் விலங்குகளை தந்தத்திற்காக கொல்பவர்களையும் அந்த நீச்ச செயலை ஊக்குவிப்பவர்களையும் என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். மனிதர்கள் உருவில் இத்தகைய கொடிய விலங்குகளுடன் வாழும் துர்பாக்கியம் நமக்கு
😔 வெறும் பகட்டுக்காக காட்டில் சுதந்திரமாக திரியும் உயிரினங்களைக் கொல்லும் இந்த கொலைபாதகர்களை நினைத்தாலே மனம் குமுறுகிறது. தாயை இழந்து பல குட்டி யானைகள் தவிக்க மனிதர்களாக வெட்கி நிற்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)
பத்தா
கடந்த வாரம், "பத்தா படம் நல்லா இருக்கு. நெட்ஃப்ளிக்ஸ்ல வந்துடுச்சு" என்று என் தங்கை சொல்வதற்கு முன்பே, நாளைக்குப் பார்க்கலாம் என்ற...
-
'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்ட...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...