Wednesday, June 20, 2018

Naledi


தெற்கு ஆஃப்ரிக்காவில் தந்தத்திற்காக ஒரு பெண் யானையை கொன்றதால் அனாதையான அதன் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளும், தன்னார்வலர்களும் பராமரித்து வருவதை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. நலெடி என்ற அந்த குட்டி யானை பவுடர் பால் குடிக்கும் அழகும் (வேதனையும் தான் 😞 ) , ஆற்று நீரில் புரண்டு விளையாடுவதும், தன்னைப் பராமரிப்பவர்களுடன் கொஞ்சுவதுமாய் குழந்தையாக குதூகலமாக உலா வர, கவனித்துக் கொள்பவர்களும் அன்புடன் சீராட்டுவதைப் பார்க்க நன்றாக இருந்தாலும் வேதனையாக இருந்தது. நலெடி ஓரளவு உடல் தேறியதும் அதை மீண்டும் காட்டில் அதன் குடும்பத்தில் விட, அவர்கள் நலெடியின் அக்கா யானையைக் கூட்டி வர, இந்த குட்டி யானையோ மனிதர்கள் பின்னால் பதுங்கி நிற்க, அவள் அக்காவோ அருகில் வருவதும் பின்னால் செல்வதுமாய் பின்பு ஒரேடியாக மறுத்து காட்டிற்குள் செல்ல... அனைவருக்கும் சோகம். பிறகு ஒரு பெரிய யானைக்குடும்பத்தை அழைத்து வர, அதில் ஒரு குட்டி யானை முன் வந்து துதிக்கையை நீட்ட, தயக்கத்துடன் நலெடியும் தன் தும்பிக்கையை நீட்டி ஒருவருக்கொருவரின் அறிமுகமாய் , நம்பிக்கையை கொடுத்து மெதுவாக அவர்களுடன் சேர்ந்து பெரிய யானைகள் நடுவே காடு நோக்கி நடக்கத் தொடங்க, பராமரிப்பாளர்களின் கண்களில் ஒரே பரவசம். பார்ப்பவர்களுக்கும் தான்! அந்த குட்டி யானைக்கு தீங்கு நேராமல் இருக்கிறதா என்று கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அன்பான குடும்பங்களுடன் அழகாக வாழ்ந்து மலைப்பை உண்டாக்கும் இப்பெரும் விலங்குகளை தந்தத்திற்காக கொல்பவர்களையும் அந்த நீச்ச செயலை ஊக்குவிப்பவர்களையும் என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். மனிதர்கள் உருவில் இத்தகைய கொடிய விலங்குகளுடன் வாழும் துர்பாக்கியம் நமக்கு😔 வெறும் பகட்டுக்காக காட்டில் சுதந்திரமாக திரியும் உயிரினங்களைக் கொல்லும் இந்த கொலைபாதகர்களை நினைத்தாலே மனம் குமுறுகிறது. தாயை இழந்து பல குட்டி யானைகள் தவிக்க மனிதர்களாக வெட்கி நிற்கிறோம்.





😞Naledi


No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...