Wednesday, June 20, 2018

என்ன தான் நடக்கிறது?

//கல்லூரி திறந்த முதல் நாள் அன்றே பட்டாக் கத்தியுடன் திரிந்த மாணவர்களைக் கைது செய்தது குறித்து இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கோடை விடுமுறைக்குப் பின்னர், நேற்று (ஜூன் 18) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. சென்னையில், முதல் நாளே பட்டாக்கத்தி மற்றும் பட்டாசுகளுடன் கல்லூரிகளுக்குச் சில மாணவர்கள் வந்திருந்தனர். விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதால், பேருந்து மற்றும் ரயில்களில் மாணவர்கள் கலாட்டா செய்யக்கூடும் என்பதால், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும், கல்லூரி திறந்த முதல் நாளிலேயே, தங்கள் பையில் பட்டாக்கத்தியுடன் வந்த பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.//
இந்தச் செய்தியைப் படித்தவுடன் வருத்தமாகவும் கோபமாகவும் இருந்தது. கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு எப்படியெல்லாம் சிந்தனை சிதறி இருக்கிறது! முதலாண்டு மாணவர்களை பயமுறுத்தவா? மற்ற கல்லூரி மாணவர்களுடன் போட்டியா? இவர்களெல்லாம் மாணவர்கள் தானா? மூளை மழுங்கியவர்கள் மட்டுமே கத்தி எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் செல்ல முடியும். புத்தகத்தைச் சுமந்து செல்ல வேண்டியவர்கள் செய்யும் செயலே அல்ல. இந்த வெட்டி மனிதர்கள் தான், தானும் வாழாமல் அடுத்தவனையும் வாழ விடாமல் அரசியல்வியாதிகளின் கைகளில் சிக்குண்டு சமுதாயத்தை சீரழிக்கும் இழிபிறவிகள். புரையோடிய சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகள் எதிர்நோக்கவிருக்கும் பிரச்னைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய துரதிருஷ்ட நிலைமையில் தான் இன்றைய பெற்றோர்கள்!
மாணவர்கள் போர்வையில் வலம் வரும் இக்கிருமிகளை இனம் கண்டு தகுந்த தண்டனையை வழங்க வேண்டும். தங்களை நெருங்காதவாறு மாணவர்களும் இவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருந்து மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பை உணர வேண்டிய காலகட்டமிது!
ஓம்!

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...