Wednesday, June 20, 2018

சிந்திப்போமா?

//இந்த வெயிலிலும் நாம் ஷுவும், டையும் மாட்டிக்கொண்டு அலைவதே அடிமைத்தனத்தின் மிச்சம்தான்!//
படித்ததில் மிகவும் பிடித்தது.
பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு ஏன் இந்த 'டை' அலங்காரங்கள் எல்லாம்? அதுவும் இந்த கொளுத்துகிற வெயிலில்! மதுரை போன்ற குப்பை சூழ் மாநிலங்களில் வெள்ளைச் சீருடை போன்றதொரு கொடுமை வேறு! ஒரு முறை வெளியில் சென்று வந்தாலே நிறம் மாறி விடும் முகமும் ஆடைகளும்! என்று இந்த பள்ளிகளின் பொறுப்பளர்களுக்கு அறிவு வந்து பெற்றோரின் வேதனையை குறைப்பார்களோ தெரியவில்லை. பணத்தை மட்டுமே குறி வைத்து கொள்ளையடிக்கும் கூடாரங்களில் இதையெல்லாம் எதிர்பார்ப்பது தவறோ?
அதை விட கொடுமை முழுக்கைச்சட்டை! வேலைக்குச் செல்பவர்கள் என்றால் அப்படித்தான் உடையணிய வேண்டும் என்ற அடிமைச்சிந்தனை மாறவே மாறாது போலிருக்கு!
அதைவிட கொடுமை கல்யாண ரிசப்ஷனுக்கு கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு நீயா நானா கோபிக்கு போட்டியாக! முடியலடா சாமிகளா! என்ன தான் மாமனார் காசுல ஓசியில ட்ரெஸ் வாங்கிக்கிட்டாலும் இப்படியா? ஒரு நியாயம் வேண்டாமா?
துணிக்கடைகளில் sweat pant, jacket எல்லாம் விற்கிறார்கள் ஓகே. படங்களில் ஜோசப் விஜய் போல நடிகர்கள் போட்டு ஆடுகிறார்கள் என்றால் பணம் வாங்கி நடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்காக அதே மாதிரி உடையை அணிந்து கொண்டு...
நாம் வாழும் இடம், தட்பவெப்பத்திற்கு ஏற்றவாறு என்று உடை அணியப்போகிறோம்? இந்த வெட்டி அலப்பறைகள் தேவையா?
இந்த விஷயத்தில் சேட்டன்கள் பரவாயில்லை. இன்னும் வேட்டி , அரைக்கைச்சட்டை என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...