இன்று கோவிலில் பிரதோஷ பூஜை நடப்பதை ஈமெயிலில் பார்த்தவுடன் அம்மாவுடன் கோவிலுக்குச் சென்ற நாட்கள் நினைவிற்கு வந்தன.
பிரதோஷத்திற்கு மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குள் முண்டியடித்து கூட்டத்துக்குள் சென்றாலும் சுவாமி அபிஷேகங்களை பார்க்க முடிவதில்லை. அவ்வளவு கூட்டம்! சரியென்று சன்னதி வெளியில் நின்று கண்ணாடி வழியே சிறிது நாட்கள் பார்த்து திருப்திபட்டுக் கொண்டோம். கூட்டம் அதிகமாக, நாங்கள் வரமாட்டோம் என்று சொல்ல ஆரம்பித்தவுடன் அம்மாவும் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
மேலமாசி வீதியிலிருந்து சற்று உள்ளே இருக்கும் தெருவில் அப்பாவின் சித்தி வீட்டுக்குப் பல முறை இக்கோவிலைத் தாண்டி சென்றிருந்தாலும் முதன் முறை சென்ற பொழுது இவ்வளவு அமைதியான, அழகான பழைய கோவில், இங்கு இருப்பது எப்படி தெரியாமல் போனது என்று தான் தோன்றியது! முதன் முறை இங்கு சென்றது ஒரு பிரதோஷ நாளன்று தான்.
'கிணிங்கிணிங்' மணி சத்தத்துடன் சைக்கிள்களும், ஆட்டோ , பைக் எழுப்பும் ஹார்ன் ஒலிகளும், கடைகளுக்குச் செல்லும் கூட்டமும் 'ஜேஜே' என்று பரபரப்பான இரைச்சலான தெருவில் இருக்கிறது கோவில்.
விசாலமான கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் எதிரிலேயே சுவாமி சன்னதி. நுழைவாயிலின் இடப்பக்கத்தில் கணபதிக்கு ஒரு சன்னதி. ருத்ரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு அபிஷேகமும் சிறப்பாக நடக்க, முதன்முறையாக மிக அருகில் நின்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு கண்டுகளித்த பூஜை நேரங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.
பிரதோஷ நாட்களில் இக்கோவிலின் நினைவு மீண்டும் மதுரைக்கே அழைத்துச் சென்று விடுகிறது!
http://www.youtube.com/watch?v=ObmIP88GY_Q

சுவாமியை வலம் வருகையில் அம்மன், பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் என்று பரந்த வெளியில். அரசமரமும், வில்வமரமும் பார்த்ததாக ஞாபகம். அன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனையும் செய்தோம். நல்லா கும்பிட்டுக்கோங்க. அப்பத்தான் நல்லா படிக்க முடியும்னு சொன்னவுடனே கண்ணை இறுக்க மூடிட்டு வேண்டியதும் ஞாபகமிருக்கிறது