Intouchables , The Fundamentals of Caring, Me Before You
இம்மூன்று திரைப்படங்களிலும் தன் தேவைகளுக்காக அடுத்தவரைச் சார்ந்திருக்க வேண்டிய உடல் ஊனமுற்றவர், அவரைப் பராமரிக்க வருபவர் என கதை இருவரைச் சுற்றியே நடக்கிறது. இவ்விருவருக்குமிடையே ஏற்படும் பந்தம் படத்தில் இழையோட மிகைப்படுத்தப்படாத இப்படங்கள் ஃப்ரெஞ்ச், அமெரிக்க, பிரிட்டிஷ் ஆங்கில திரைப்படங்கள். இம்மூன்று நாட்டின் சமூக பிரச்னைகளையும் ஆங்காங்கே கோடிட்டு கதையோடு இணைத்திருந்த விதமும் அருமை.
தொடக்கத்தில் பராமரிப்பாளர்கள் பணத்திற்காக கடமையே என அவ்வேலையை ஏற்றுக் கொண்டாலும் முடிவில் உடல் ஊனமுற்றவர்களிடம் மனதளவில் நெருக்கம் கொள்கிறார்கள். படுத்த படுக்கையாக இருப்பவர்களின் மனநிலையையும்,வேதனைகளையும் இப்படங்களில் அழகாக இயற்கையாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.
Intouchables பெருஞ்செல்வந்தர் ஒருவர் விபத்து ஒன்றில் நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் காலத்தைக் கழிக்க வேண்டிய சூழ்நிலையில் அவரைப் புரிந்து அனுசரித்துச் செல்லும் பராமரிப்பாளரைத் தேடி கடைசியில் வேலையில்லாமல் திரியும் ஒருவர் அரசாங்கத்திடமிருந்து இலவச சலுகைகளைப் பெற நேர்முகத்தேர்விற்கு வர, அவரைமிகவும் பிடித்துப் போய்விடுகிறது செல்வந்தருக்கு. பெரிய வீட்டின் சூழ்நிலையும்,செல்வந்தரின் இனிய சுபாவமும் கண்டு இளைஞரும் அவரை அன்புடன் கவனித்துக் கொள்ள, அச்செல்வந்தர் விரும்பிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து சுபமாக படம் முடிகிறது. தமிழில் கார்த்தி, நாகார்ஜுனா நடித்ததாக கேள்வி.
The Fundamentals of Caring தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்ட இளம் வாலிபனை கவனித்துக் கொள்ள வருபவர் ,வெளியுலகத்தை காணாத அந்த வாலிபனின் மனவேதனைகளை நன்கு அறிந்து உதாசீனப்படுத்துபவனை நல்வழிப்படுத்தி அவனுடைய கனவுகளை நிறைவேற்றி வாழ்வின் அழகியலைப் புரிந்து கொள்ள உதவுகிறார்.
Me Before You அழகான, துடிப்பான பணக்கார இளைஞர். எதிர்பாராத விபத்து ஒன்றில் படுத்த படுக்கையாகி விட வாழ பிடிக்காமல் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துடிப்பவர். அவரை கவனித்துக் கொள்ள வேலையிழந்து பணத்திற்கு அல்லாடும் நாயகி வேறு வழியில்லாமல் இவ்வேலையை ஏற்றுக் கொண்டாலும் அந்த இளைஞரிடம் நெருங்க அஞ்சும் கதாபாத்திரம். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வளைய வரும் அப்பெண்ணை கதாநாயகன் விரும்பினாலும் சுயகழிவிரக்கத்தில் அவளிடமிருந்து விலகியே நிற்கிறான். இருவரும் நெருங்கி வரும் வேளையில் தன் முடிவிலும் தீவிரமாக இருக்க, வேதனையுடன் படம் நிறைவடைகிறது.

தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் மிகையான நடிப்பை வெளிப்படுத்தாமல் இயற்கையாக நடித்திருப்பதும், எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கதையை அதன் கோணத்திலிருந்து சற்றும் விலகிடாமல் அதன்போக்கிலேயே சமூக பிரச்னைகளையும் நேர்த்தியாக கொண்டு சென்றதில் இம்மூன்று திரைப்படங்களும் வெற்றி பெறுகிறது.
அதிக உணர்ச்சிகளைக் கொட்டி படம் பார்ப்பவர்களின் அனுதாபத்தைப் பெற முயலாமல் எதார்த்தமாக எப்படித்தான் இவர்களால் மட்டும் இப்படியெல்லாம் படங்களை எடுக்க முடிகிறதோ?
ஹ்ம்ம்ம்...

No comments:
Post a Comment