Saturday, June 1, 2013

கும்பகோணம் - மகாமக குளம்

ஆங்கில வருடப்பிறப்பு அன்று அதிகாலையில் நானும் என் மகளும் தயாராக இருப்பதைப் பார்த்து இப்பிடியா, ஆறு மணின்னா ஆறு மணிக்கு டான்-னு ரெடியாவிங்க என்று வியந்து கொண்டே என் தம்பியும் தயாரானான்*:) happy  அதற்குள் காபியும் வந்து விட, குடித்து முடித்து விட்டு, முதலில் மகாமககுளத்திற்குப் போக வேண்டும் என்று நேரே அங்கு போனோம். அப்பொழுது தான் விடிந்து கொண்டிருந்தது.

முதல் நாள் இரவு புதுவருட கொண்டாட்டத்தை தெருவில் சேர்ந்திருந்த குப்பைகள் உணர்த்தின. பட்டாசுக் குப்பைகள், குடித்து விட்டுப் போட்ட பாட்டில்கள், கோகோ கோலா பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் குப்பைகள் என்று தெருவே குப்பை மயம்! குளத்தைச் சுற்றி குப்பையை எடுத்துச் சுத்தம் செய்பவர்கள் கையில் விளக்குமாறுடன்!

குளத்தைச் சுற்றி ஹோட்டல்களின் பெயர்கள் எல்லாம் அந்த இன்(Inn), இந்த இன், பிளாசா என்று ஒரே மாடர்ன் மயம்! பார்க்க டீசண்டாக இருக்கிறது.

கோவிலிலிருந்து ருத்ரம் கேட்கவே சுகமாக இருந்தது. காசிவிஸ்வநாதர் கோவில் குடமுழுக்குப் பணிக்காக கோபுரத்தை மூடியிருந்தார்கள். மெதுவாக குளப்படிக்கட்டுகளில் இறங்கி உள்ளே போனோம்.

மகாமகம் அன்று அந்த குளத்தில் தீர்த்தம் கூட தெரியாத அளவில் மக்கள் கூட்டம் இருந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். சில இடங்களைப் பார்த்தவுடன் மனதில் தோன்றும் ஒரு இனம் புரியாத பரவசம் அந்த இடத்தில் எனக்கும். பல புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் என்பதாலா?

பெரிய குளம். நீண்ட படிக்கட்டுக்கள். அதிகாலையில் தண்ணீருடன் குளத்தைப் பார்க்க ரம்மியமாக இருந்தது. புண்ணியத் தீர்த்தம்!

ஒன்பது மண்டபங்கள் குளத்தைச் சுற்றி. ஓடுகள் வேய்ந்த  திண்ணைகளுடன் அக்ரஹாரத்து வீடுகள்,  காலையில் குளத்தில்  நீராடிக் கொண்டே சந்தியாவந்தனம் செய்யும் மக்கள், தலையில் நீரை தெளித்துக் கொள்பவர்கள், கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலைப் பெருக்கி நீர் தெளித்துக் கோலம் போடுபவர்கள், கடையை திறப்பவர்கள், இவர்களைப் பார்த்துக் கொண்டே சூரிய பகவானும் வெளிவர என்று மெதுவாக பொழுது புலர ஆரம்பித்து விட்டது.

6 comments:

  1. இனிமை.... கோலங்கள் அருமை...

    ReplyDelete
  2. நன்றி, தனபாலன். ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு அழகு கோலங்கள் பலர் வீட்டு வாசலிலும்.:)

    ReplyDelete
  3. ஓடுகள் வேய்ந்த திண்ணைகளுடன் அக்ரஹாரத்து வீடுகள், காலையில் குளத்தில் நீராடிக் கொண்டே சந்தியாவந்தனம் செய்யும் மக்கள், தலையில் நீரை தெளித்துக் கொள்பவர்கள், கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலைப் பெருக்கி நீர் தெளித்துக் கோலம் போடுபவர்கள், கடையை திறப்பவர்கள்,.......இதைத்தான் உங்க பலம்னு நான் நினைக்கிறேன். போகிற போக்கில் வாசகனையும் காட்சிக்குள் இழுத்துப் போடும் வார்த்தை தெரிவுகள். :)

    எனக்கெல்லாம் இந்த நுட்பம் வாய்க்கவே இல்லை. :)

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, சரவணன்.

      Delete
  4. இது மாதிரி கலர் கோலங்களை பார்த்து வெகு நாளாகிறது.நகர்புறத்தின் அவசரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நாம் இந்த கலையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்னு தோணுது. பொங்கலுக்கு முதல்நாள் இரவு கோலம் போடும் அம்மாவுக்குத் துனையாய்,குளிருக்கு இதமாய் போர்வையை இழுத்துப் போத்திட்டு உட்கார்ந்திருந்த நாட்கள் நினைவில் வந்து போகிறது. :)

    ReplyDelete
    Replies
    1. பல வீடுகளின் முன் அழகழகு கோலங்கள்! நகரத்தில் பழக்கம் குறைந்து விட்டது. மதுரையில் பல இடங்களில் இன்னும் இருக்கிறது. அது மட்டும் சந்தோஷம் :)

      Delete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...