கொரோனா வீட்டுச் சிறை அடைப்பில் கொரியன் சீரியல்கள் பார்க்கத்தொடங்கியதில் ஆரம்பித்தது இந்த பைத்தியம். இதற்கு முன் பல கொரிய படங்களைப் பார்த்திருந்தாலும் மெதுவாக செல்லும் "Crash landing on you" தொடர் ஆர்வத்தை உண்டாக்க, காலையில் ஆரம்பித்து நடுநிசி வரை என்று இரு நாட்களில் பார்த்து முடித்தேன். வட மற்றும் தென் கொரியாவின் வாழ்க்கை முறை, புவியியல் அமைப்பு, சிக்கென உடையுடன் அழகிய பெண்கள், நிதானமான நடிப்பில் உள்ளங்கவரும் கதாநாயகன், "துறுதுறு" நாயகி, இருவருக்கிடையே தொட்டுத்தொடரும் காதல் , குடும்பச் சண்டைகள், வெட்டி வம்புகள், நண்பர்கள் என கலவையுடன் ஆங்காங்கே மெதுவாகச் சென்றாலும் சோர்வடையாமல் செல்கிறது இத்தொடர்.
பெரும்பாலான ஆசிய திரைப்படங்களில் உணவும் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது போல் இப்படத்திலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கூடவே மதுவும்! அதுவும் குடும்பமாகவும் நண்பர்களுடனும் ! அவர்களின் சமையல் முறையும், சிறிதாக இருந்தாலும் வீடுகளின் அழகும், நேர்த்தியும் புதுமையுடன் கூடிய பழமையும் அழகாகவே இருக்கிறது. படம் நிறைவடைவது சுவிட்சர்லாந்தில்! கண்களுடன் மனதும் நிறைவாக!
தமிழ் சீரியல் இயக்குனர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. பார்க்கும் நமக்கும் தான். என்று தான் நாம் இத்தகைய பொழுபோக்கு அம்சங்களுடன் கூடிய தொலைகாட்சி தொடர்களைத் தமிழில் காண்போமா? குடும்பத்தைச் சின்னாபின்னாமாக்கும் தொடர்களிலிருந்து வெளியே வந்தால் காத்திருக்கிறது நல்ல நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள்!
என்ஜாய் :)
இனி எண்ட தேசம் சவுத் கொரியா
எண்ட ஹீரோ....💓💓💓
No comments:
Post a Comment