Monday, April 13, 2020

What's wrong with secretary Kim?


இந்த கோவிட்19 வந்தாலும் வந்தது நான் கொரியன் டிராமாவுக்கு அடிமையாகி விட்டேன். காந்திமதி வேறு இந்த தொடரைப் பார்க்க சொல்லி சிபாரிசு பண்ண, அப்புறம் என்ன ஆரம்பித்து ஒன்றிப்போய் பதினாறு பாகங்களையும் பார்த்து முடித்தும் விட்டேன். எத்தனை நாட்களில் என்று மட்டும் கேட்க கூடாது 😄 

ஆக்ரோஷமான அமெரிக்கத்தனமான காதலும் அல்ல; விரசமான கட்டாய இந்திய காதலும் அல்ல. வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவரிடையே அழகாக அமைதியாக கவிதை போல் மலரும் காதல். அதை சொல்லியவிதமும் அழகு. தன்னைச்சுற்றி மிளிரும் ஒளிவட்டம், தன்னுடைய கல்வி, வேலைத்திறன், மற்றவரை விட தன்னை உயர்வாக நினைத்துக் கொள்ளும் கதாநாயகன். ஒன்பது வருடமாக அவனுடைய காரியதரிசியாக சிரித்த முகத்துடன் குழந்தையின் துள்ளலுடன் 'யே', 'யே' என்று அவன் சொல்வதை ஆமோதித்து கடமையில் அசத்தும் கதாநாயகி.

வேலையை விட்டுவிட்டு தன் கனவுகளை தனக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க போவதாக அறிவித்த நாளிலிருந்து அவளை காதலிக்கத் தொடங்கி, அவளுடைய வாழ்க்கையை அறிந்து அவளுக்காகவே தன்னை மாற்றிக்கொள்ள பிரயத்தனப்படுவது என எல்லாமே இயற்கையாக!

நடுநடுவே இருவரின் குடும்பக் கதைகள், அலுவலகத்தில் நடைபெறும் காதல் டிராமா, சிறுவயதில் கதாநாயகன் எதிர்கொண்ட நிகழ்வு, அதனால் சகோதரர்களிடையே ஏற்பட்ட பிணக்கு என்று கதம்பமாக சென்றாலும் முக்கோண காதல் இறுதியில் எப்படி நிறைவு பெறுகிறது என்று மெதுவாக நகர்ந்தாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் ரசிக்கத்தக்க வகையில் தொடரை அமைத்திருந்தார்கள். ஆட்களும் 'சிக்'கென்று அழகாக!

இடுங்கிய கண்கள் வழியாக டிங் டிங் என காதலைப் பரிமாறிக்கொள்வதும் அழகு தான் 💗 காதலில் வீழ்ந்த பின் கதாநாயகனின் சிரிப்பும், காதலியின் ரசிப்பும்...

தொடர்களென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? தமிழிலும் எடுக்கிறார்கள் எப்பொழுதும் யாரையாவது அடிப்பது, கொல்வது, அடுத்தவன் குடும்பத்தை நாசமாக்குவது என்று.

பேசாமல் கொரியன் டிராமா பார்க்க ஆரம்பியுங்கள்! பொழுதும் நன்கு போகிறது. மனதிற்கும் அமைதியாக இருக்கிறது.

இனி எண்ட தேசம் சவுத் கொரியா 
எண்ட ஹீரோ....💓💓💓



2 comments:

  1. நானும் கொத்தடிமையாகிட்டேன் கொரிய தொடர்களுக்கு.

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...