Tuesday, April 21, 2020

Chocolate


கொரியன் டிராமா வரிசையில் நான் கண்டு களித்த மூன்றாவது தொடர் , பதினாறு பாகங்கள் கொண்ட "Chocolate". ராக்கேஷ் பரிந்துரைத்தது. இத்தொடரில் கதாநாயகி சூப்பர் செஃப். பிறகென்ன? பிடிக்காமல் போகுமா! சிறுவயதில் அம்மாவின் உணவகத்தில் அவளுக்குத் துணையாக சமையல் கற்றுக் கொள்ளும் கதாநாயகன் பிற்காலத்தில் மூளை அறுவைசிகிச்சை நிபுணராகி விடுகிறான். சிறுவயதில் அவனுடைய உணவகத்தில் சுவைத்த உணவின் ருசியில் மயங்கி  சமையல் வல்லுநராகி விடுகிறாள் கதாநாயகி. இளகிய மனது. எவருக்கும் உதவிடும் கதாநாயகன், கதாநாயகி. சமையல் அறையையும் மருத்துவமனையையும் சுற்றி நடக்கும் கதை. அங்கு வரும் நோயாளிகள், அவர்களின் துயரங்கள், கதாநாயகனின் குடும்பச்சண்டைகள், சிறுவயதில் சந்தித்த பெண்ணைத் தேடும் நாயகன், அவனருகிலேயே அவனைத் தெரிந்து கொண்ட கதாநாயகி, முக்கோண காதல் என்று கலந்து கட்டி ஒரு தொடர்.

பொறுமையாக அவள் காய்கறிகளை நறுக்கும் விதமும், சமையல் செய்ததை அழகாகப் பரிமாறுவதும் ...ம்ம்ம். லதா சமைக்க கத்துக்கறோம். அசத்துறோம்ம்ம்ம். இந்த தொடரைப் பார்த்த பிறகு ஏனோ தானோவென்று நறுக்கும் வெங்கயாத்தையும் காய்கறிகளையும் பொறுமையாக அழகாக ஒரே அளவு துண்டுகளாக நறுக்க ஆரம்பித்திருக்கிறேன். பார்ப்போம் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் என்று!

சவுத் கொரியா நாடகங்களில் மழையும் ஒரு அங்கமாக இருக்கிறது. பச்சைப்பசேல் கிராமியச் சூழலும்,  பல படிகள் ஏறிச்செல்லும் மலை வீடுகளும்... கண்ணுக்கு குளிர்ச்சியாக. அவர்களின் குடும்ப அமைப்பும் நம்முடைய குடும்ப அமைப்பை ஒத்திருப்பதாலோ என்னவோ இந்த தொடர்கள் பிடித்துப் போகிறது. ஏழை மருமகளை சீண்டாத அதிகார மாமியார், அண்ணன் மகனை ஓரம்கட்டும் சித்தப்பா, சொத்தை வளைக்க நினைக்கும் சித்தி கூடவே சில நல்ல கதாபாத்திரங்களும் என சோகம், மகிழ்ச்சி, காதல், குடும்பச் சண்டை என மசாலா தொடர்.

நம் தலைவாழை இலையில் விதவிதமான உணவுவகைகளைப் பரிமாறி சாப்பிடுவது போல குட்டி குட்டி கோப்பைகளில் குடிக்கும் டீ. சின்ன சின்ன கிண்ணங்களில் வகைவகையாக காய்கறிகள், சூப்புகள், சோறு என்றிருக்கிறது இவர்களின் உணவுப்பழக்கம். குச்சிகளில் சோற்றை எடுத்து சூப்பில் தொட்டு கிம்ச்சி, காய்கறிகளுடன் சாப்பிடுவது என்று பசியைத் தூண்டிவிடும். கூடவே சமைக்கும் ஆர்வத்தையும்😂

பொறுமை இருப்பவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும். கொஞ்சம் ஜவ்வு தான்.

வரப்போகிற மாங்காய் சீசனில் மாவடு, தொக்கு, ஊறுகாய் போடலாம் என்றிருந்த என்னை கிம்ச்சி ரெசிபி தேட வைத்துவிடுவார்கள் போல.

இனி எண்ட தேசம் சவுத் கொரியா ...டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்
எண்ட கொழுக்கட்டை டம்ப்ளிங்... டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்
எண்ட ஊறுகாய் கிம்ச்சி ....டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங் 

டேய் கொரோனா , உனக்கே இது நியாமா இருக்கா? எல்லாம் உன்னால வந்தது 😂😂😂

இனி எண்ட தேசம் சவுத் கொரியா 
எண்ட ஹீரோ....💓💓💓


2 comments:

  1. Super! இப்போதான் இங்கு செம்பட்டை மாம்பழம் வர ஆரம்பித்தது! மாவடு இங்கு வராது! மதுரை போகவேண்டும்! Lockdown எப்போ முடிய? எப்போ மதுரை போனதோ? தெரியல ஸ்வர்ணலதா!

    கட்டுரை அருமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி. மதுரைக்கு இன்னும் இரண்டு வருடங்களில் போயிட்டு வந்துடலாம்ங்கிற நம்பிக்கை இருக்கு :)

      Delete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...