Thursday, August 26, 2021

அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் – அசோகமித்திரன்


அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் – அசோகமித்திரன்

பக்கத்துப் பக்கத்து வீடுகளில் வசிக்கும் இருவருக்கிடையே நடக்கும் காட்சி அமைப்பு. வேலையற்றவன் ஒருவன். குடும்பஸ்தன் இன்னொருவன். அழகான குடும்பம் நான்கு வயது மகனை இழந்து கதறி அழ, காரணாமானவனை மன்னித்து நிராகரிக்கிறாள் மகனை இழந்த அந்த தாய். அவளுக்குத் தான் எத்தனை பெரிய மனது!

மனித மனம் எத்தனை குரூரமானது என்பதை தன்னுடைய எளிய நடையில் அழகாகச் செதுக்கியிருக்கிறார் கதாசிரியர். என்ன படித்து என்ன பலன்? தனக்குரிய ஒன்றை பக்கத்து வீட்டுக்காரன் எப்படி பயன்படுத்தலாம் என்பதில் ஆரம்பிக்கும் கோபம், பத்திரிகையில் வெளியான தனக்குப் பிடித்த நட்சத்திரத்தின் முகத்தில் ஒட்டியிருந்த புளியால் அலங்கோலமாக காட்சியளிக்க , வெறுப்பின் உச்சிக்கே சென்று சந்தர்ப்பம் கிடைக்கையில் அதற்கு காரணமானவனைப் பழி வாங்கிட வேண்டும் என்று ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. அப்படியொரு வாய்ப்பு கிடைக்கையில் அவனின் கோபத்தால் மனிதம் மறைந்து அவனுள் உறங்கியிருக்கும் பூதம் தன் கேவலமான எண்ணத்தை நிறைவேற்றுகிறது. ஒரு தினசரி செய்தித்தாளால் ஏற்பட்ட வன்மம் எப்படியெல்லாம் அவனைக் குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது! நிம்மதியை இழக்க வைக்கிறது?


இப்படித்தானே இருக்கிறோம் நாம் 😭😭😭


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...