After a snow storm |
அதேபோல் தான், முதல் பனிமழையும். இரவிலிருந்தே வானம் ஒரு வித பழுப்பு நிறத்துடன் இந்தா வருகிறேன் என்று சிணுங்கி கொண்டே பஞ்சு பறப்பது போல ஆரம்பித்து, 'சடசட'வென்று சடுதியில் பஞ்சுமழையாகி 'கொட்டோ கொட்டெ'ன்று கொட்டி, சிறிது நேரத்தில் வீட்டுக் கூரைகள் எல்லாம் ஒரே வெண்பனியால் மூடப்பட்டு பார்க்கவே நன்றாக இருந்தது. காலையில் எழுந்திருந்து பார்த்தால் தெருக்கள், வீடுகள், கார்கள் எல்லாமே பனியால் மூடப்பட்டு, ஒரே 'வெள்ளைக்' காடாக பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அப்போதெல்லாம் கார் கிடையாது. அதனால் பல கஷ்டங்கள் தெரியவில்லை.
அமெரிக்கா வந்த பிறகு, மிச்சிகனில் இருந்த சமயம் அடிக்கடி snow கொட்டும். என் கணவர் தான் கார் ஓட்டுவார். பயந்து கொண்டே தான் உட்கார்ந்திருப்பேன். temperature மைனசில் போகும் போது black ice மேல் கார் போய் வழுக்கி கொண்டு எதிலாவது மோதி ஆங்காங்கே வண்டிகள் நிற்பதை பார்த்தால் பயமாக இருக்கும். அதே போல் snow பெய்யும் பொழுது wiper தள்ளிக் கொண்டே வர, நெரிசலில் ஊர்ந்து போவது மகா கொடுமை. snowstorm கொடுமையே தாங்காது. இதில் blizzard என்று சொல்லி இன்னும் பயமுறுத்தினார்கள். ஒருநாள் முழுவதும் தொடர்ந்து பனி கொட்டி, அடுத்த நாள் கதவை திறந்தால், கதவின் மேல் இருந்த snow எல்லாம் வீட்டின் முன்னறையில்:( அவசியம் இல்லாவிட்டால் வெளியே போகாதீர்கள் என்று அறிவிப்புகள். வீட்டுக்குள் இருந்தபடியே அந்த பனிப்பொழிவை பார்த்துக் கொண்டிருந்தோம்.
Utah வில் இருந்த பொழுது ஓரளவு snowவிற்கு பழகி விட்டோம். அங்கு காலையில் snow பெய்தால் மாலைக்குள் கரைந்து விடும். சுற்றிலும் பனிபடர்ந்த மலைகள். பனிசறுக்கு விளையாட என்று மலைகள். அங்கும் நண்பர்கள் விளையாடுவதை பார்க்க போனோம். சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் அழகாக snowboarding, skiing செய்வதை பார்க்க நன்றாக இருந்தது. பல நண்பர்களும் skiing பழகிக்கொண்டார்கள். அந்த விளையாட்டும் அழகு தான். மலை உச்சியிலிருந்து 'சர்சர்' என்று snow வைத் தள்ளிக் கொண்டே வளைந்து வளைந்து இறங்கி வருவதை பார்க்கவும், அவர்களை ஏற்றிக் கொண்டு லிப்ட்கள் போவதையும், சூடாக்கப்பட்ட cafetariaவில் hot chocalate குடித்துக் கொண்டே பார்ப்பதும் சுகம் தானே?
சமயங்களில் இரண்டு அடிக்கும் மேலும் snow பொழியும். பனிப்பொழிவு முடிந்தவுடன் செடிகள், கார்கள், சாலைகள் என்று எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளை மழை தான். அதுவும் ஒரு அழகு தான். உப்பளம் போல் தெருவெங்கும் ஒரே வெள்ளை பனி- சூரிய வெளிச்சத்தில் கண்களை கூச செய்யும். பள்ளிகளுக்கு விடுமுறை என்றால் குழந்தைகள் snow உருட்டி விளையாடுவதும், sled -ல் சறுக்குவதுமாய் இருப்பார்கள். பெற்றோர்கள் கார்களை சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். இது வரை, கடுமையான பனிப்பொழிவு இருந்தும் ஒருமுறை கூட அலுவகங்களுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டதில்லை. முக்கால்வாசிப் பேர் வந்து விடுவார்கள் கூட. பனிப்பொழிவு என்றவுடன் இரவிலிருந்தே சாலைகளில் அதை கரைக்கும் உப்பை தெளித்து வைத்து விடுவார்கள். அதனால் சாலைகளில் ஓட்ட சிரமம் இருக்காது. தெருக்களை மெதுவாகத்தான் சுத்தம் செய்வார்கள். வீட்டிலிருந்து மெயின் ரோட்டை வந்தடைவதற்குள் கார் தாறு மாறாக போகும் :( முருகா, பத்திரமாக வீடு போய் சேர வேண்டுமே என்று இருக்கும்.
After an ice storm |
இப்படி, பனி, குளிர், ஐஸ்மழை என்று இந்த பனிக்காலம் முழுவதும் போய்க் கொண்டிருக்கும். வீட்டில் ஹீட்டர் போட்டுக் கொண்டு பில்லும் தாறுமாறாய் எகிறிக் கொண்டிருக்கும். வெளியில் போக வேண்டுமென்றால் கால் முதல் தலை வரை போர்த்திக் கொண்டு சகல அலங்காரங்களுடன் போவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். குழந்தைகள் பாடு தான் பெரும்பாடு! பல குளங்களும், ஆறுகளும், நதிகளும் உறைந்து போய் பறவைகளும் அதில் வழுக்கிக் கொண்டு போவதை பார்க்கலாம். பல இடங்களிலும் அரசாங்கமே பொது மக்களுக்காக நன்கு பராமரித்த ஐஸ் ஸ்கேட்டிங் அரங்குகளில் குழந்தைகள், பெரியவர்கள் என்று பலரும் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருப்பார்கள்.
Frozen lake |
நாங்கள் இருக்கும் பகுதியில் கிறிஸ்துமஸ் வாரத்திற்கு முன்பு Santa Speedo Sprint என்று ஆண்களும் பெண்களும் ரெட் கலர் ஸ்விம்மிங் உடை, santa hat மட்டும் போட்டுக் கொண்டு இந்த குளிரில் ஓடுவார்கள்!!! அதேபோல், ஜனவரி மாதம் முதல் நாள் அன்று, உறைந்தும் உறையாமலும் இருக்கும் ஏரியில் 'தொபுக்கடீர்' என்று குதித்து வருவார்கள்.
Polar plunge |
போன வருடம் snowshoeing என்று காலில் டென்னிஸ் ராக்கெட் போன்று ஒன்றை கட்டிக் கொண்டு snow வில் நடந்த அனுபவம் நன்றாக இருந்தது. பனியில் அணில்,மான்கள் நடந்த தடயங்கள் பார்த்துக் கொண்டே குளிர் காற்று முகத்தில் அடிக்க தத்தி தத்தி பனியில் நடந்தது என்று ஒரு புதிய அனுபவம்!
Bike race on a frozen lake |
ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது என்று பாடிக் கொண்டே இருக்கலாம் இந்த பனிக்காலத்தில்..
My son walking on a frozen lake |
”ஜில்”ல்லுனு ஒரு பதிவு! :)
ReplyDeleteநன்றி, சரவணன்.
Delete