டிசம்பர் மாதம், 2005 வருடம்.
குடும்பத்துடன் ப்ளோரிடா போய் நண்பர்களையும், டிஸ்னி உலகத்தையும் பார்த்து விட்டு வருவது என்று தீர்மானித்து கிறிஸ்துமஸ் நாளன்று அதிகாலையில் விமான நிலையத்தில் காத்திருந்தோம். என் மகனுக்கு நினைவு தெரிந்து முதல் விமானப் பயணம்.
குழந்தைகளும் இந்த விடுமுறையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்கும் ஒரே குஷி. அதிகாலை ஐந்தரை மணிக்கே விமான நிலையத்தில் ஆஜர். டிக்கெட் சரிபார்த்த பிறகு மொத்தமே 15-20 பேர் போகும் ஒரு சிறிய விமானத்தில் பயணம். அதுவே வேடிக்கையாகத் தான் இருந்தது. விமானியும் எடையைச் சமனாக்க குழந்தைகளையும் பயணிகளையும் மாற்றி உட்கார வைத்தார்.
நானும் என் மகனும், என் மகளும் என் கணவரும் என்று உட்கார , ஒரு வழியாக விமானமும் மேலே பறக்க ஆரம்பித்தது. எழும்பிய விமானம் ஒரு சைடாக வளைந்து வட்டமிட, குழந்தைகளும் வீடு தெரிகிறதா என்று எட்டிப் பார்த்துக் கொண்டே வர, இன்னொரு சைடில் மீண்டும் ஒருமுறை வட்டமிட, இதே தொடர்ந்து கொண்டே இருந்தது. முதலில் பார்க்கும் பொழுது, ஹை! வீடு தெரிகிறது, கோவில் தெரிகிறது, மால் கூட தெரிகிறது என்று மகிழ்ந்த நாங்கள் திருப்பித் திருப்பி அதே காட்சி தெரிந்தவுடன் சரி, வேறு விமானத்திற்கு தான் வழி விடுகிறார்களோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே,
ஆகாயத்தில் இருபக்கமும் மாறி மாறி வளைந்து மீண்டும் மீண்டும் வட்டமிட, ஒரே தலை சுற்றல். பரிதாபத்துடன் குழந்தைகளும் எங்கே வாயை திறந்தால் வாந்தி வந்து விடுமோ என்று கணவரைப் பார்க்க, அவரும் ஒன்றும் புரியவில்லையே என்று சைகையினால் சொல்ல, அதற்குள் விமானப் பணிப்பெண்ணும் சிறிது பொறுத்திருங்கள் என்று எங்கோ தவறு நடக்கிறது என்று தெரிந்தும் எல்லோரையும் சமாதானப்படுத்த,
விமானத்தில் இருக்கும் அனைவருமே என்ன நடக்கிறது என்று புரியாமல் மலங்கமலங்க முழிக்க, எதிர்பாராத விதமாகச் சடுதியில் விமானம் 'தடக்'கென்று தரையை முட்ட, விமானத்தின் ஆட்டத்தால் நாங்களும் மேலும் கீழும் போய் தலையில் சிறிது அடிப்பட்டுப் பேசக்கூட முடியாத நிலையில் விட்டால் போதும் என்று கீழே பார்த்தால் தீயணைப்பு வண்டிகளும், போலீஸ்கார்களும் சூழ, எதையும் கண்டு கொள்ளும் மன நிலையில் இல்லாமல் அனைவரும் பதட்டத்துடன் இறங்க, அனைவரையும் கவனமாக இறக்கி ஆசுவாசப்படுத்த, நார்மல் நிலைக்கு வர சிறிது நேரம் ஆகிற்று.
என்னடா இருந்து இருந்து குழந்தைகளுடன் ஆசையாக ஆரம்பித்த பயணம் இப்படி ஆயிற்றே என்று என்ன தான் நடந்தது இனி எப்படி ப்ளோரிடா போவது என்று கேட்க கவுண்டருக்குப் போனால் அவனவன் கிறிஸ்துமஸ் நாளன்று குடும்பத்துடன் இருக்கணுமே என்ற கவலையில் ஒரே குழப்பம் அங்கு.
எங்கள் முறை வந்த பொழுது ஏன் இப்படி ஆயிற்று என்று கேட்க, அங்கிருந்த பெண்மணி, விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு, வண்டியை இறக்க விமானி கடும் முயற்சி செய்து உங்களை எல்லாம் காப்பாற்றியிருக்கிறார் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அந்த வீடியோவை காண்பிக்கிறேன் என்று பார்த்தால் - நாங்கள் இருந்த விமானத்தின் முன் சக்கரங்கள் விமானம் டேக் ஆப் ஆன பிறகு உள்ளே செல்லாமல் பாதி மடங்கிய நிலையில் மாட்டியபடியே இருக்க, வேறு வழியில்லாமல் nose dive செய்து இறக்கியிருக்கிறார்கள்.
மனக்கண்ணில் மேலும் கீழும் ஆடிய விமானம், தலையில் அடிப்பட்டு 'அவுச் அவுச்' என்று வரிசையாக மக்கள் அலறியது- அதைப் படமாக பார்க்கும் பொழுது தான் நடந்த நிகழ்ச்சியின் அபாயம் புரிந்தது. நீங்கள் உயிருடன் திரும்ப வந்ததே பெரிய விஷயம் என்று சொல்லும் பொழுது முதுகுத்தண்டில் சில்லென்று ஒரு சிலிர்ப்பு! அட நாராயணா!
உயிருடன் அனைத்துப் பயணிகளையும் காப்பாற்றிய அந்த விமானி தான் அன்று கடவுளாகத் தெரிந்தார்.
பிறகு அடுத்த விமானத்தில் பறந்து ப்ளோரிடா போய் விட்டு வந்தாலும் இந்த திக்...திக்...திக் நிமிடங்கள் மட்டும் மறக்க முடியவில்லை.

திருமணம் ஆன புதிதில் எனக்கும் இத்தகைய ஓர் அனுபவம் உண்டு. மதுரையில் இருந்து சென்னை வந்த விமானம் திடீரென கடலுக்கு மேல் பறக்க ஆரம்பித்தது. எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், விமானத்தில் இருக்கும் எரிபொருளை கடலில் கொட்டுவதற்காக கடலின் மேல் பறப்பதாயும் சொல்லி திகிலேற்படுத்தினார்கள்.
ReplyDeleteவாழ்க்கையில ஒரு சுகத்தையும் முழுசா அனுபவிக்காம போய்ச் சேரப் போகிறோமே என அந்த கலவரச் சூழலிலும் வருத்தப் பட்டதை, இப்ப நினைத்தால் சிரிக்கவே தோணுகிறது. அப்புறமாய் விமானி ஏதோ டகால்டி வேலை எல்லாம் செய்து விமானத்தை தரை இறக்கினார் விமானத்தை சுற்றி தீயனைப்பு வண்டிகள் எல்லாம் வந்து நின்று பயமேற்படுத்திய அனுபவம் அது.:)
சென்னை-மதுரை போறப்ப படபட-ன்னு ஆடுற விமான இறக்கைகள் என்றுமே ஒரு தான். அதிலே //விமானத்தில் இருக்கும் எரிபொருளை கடலில் கொட்டுவதற்காக கடலின் மேல் பறப்பதாயும் சொல்லி திகிலேற்படுத்தினார்கள். // இந்த மாதிரி எல்லாம் சொன்னா அவ்வளவு தான் :(
Delete