கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதம் என்றால் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிந்து விரதம் ஆரம்பிக்கும் மாதமும் கூட.
துளசி மாலை, காவி, கருப்பு, மஞ்சள் என்று பக்தர்கள் ஆடையணிந்து பயபக்தியுடன் உலா வரும் நாட்களில் முருகன், ஐயப்ப பக்திப் பாடல்கள் முழங்கும் காலமும் கூட.
அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தும் ஐயப்பனின் பக்திப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
K.J.ஜேசுதாஸ்-ன் தாலாட்டும் காந்தக்குரல், செவிகளை வருடும் ஆர்ப்பாட்டமில்லாத இசை, அமைதியாக அமர்ந்து கேட்க,
பாடல் முடிவடையும் போது உடலும் ஷாவசனம் செய்தது போல் சில்லென்று,
மனமும் அமைதியாகி இருக்கும்.
சபரிமலை என்பது காட்டுக்குள் அமைந்திருந்த ஒரு பௌத்த மடாலயம்.ஒவ்வொரு வருடமும் அறுவடை முடிந்தவுடன் அந்த பகுதி மக்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை அந்த மடத்திற்கு தானமாய் கொடுத்து விட்டு வரும் நிகழ்வுதான்.....காலப் போக்கில் திரிந்து/திரிக்கப்பட்டு இன்று இருமுடி கட்டிக் கொண்டு செல்வதாகியிருக்கிறது.
ReplyDeleteநான் இதைச் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நானும் இதை சொல்லாமல் இருக்கப் போவதில்லை. :)
புதுப்புது தகவல்களா சொல்றீங்களே, சரவணன் :)
Delete