மெல்லிய நீண்ட கழுத்து, உயரமான குச்சிக்கால்கள், மஞ்சள் வண்ண நீண்ட அலகு, கூரிய பார்வை, பரந்து விரிந்த சிறகுகளை கொண்ட இப்பறவைகள் நீர் நிலைகளின் அருகில் காணப்படும். மரங்களின் உச்சியில் கூடு கட்டி முட்டையிடுகிறது. ஒரு குளத்தில் ஒரு ப்ளூ ஹெரான் மட்டுமே இருக்கும். மற்ற ப்ளூ ஹெரான்கள் வந்தால் பறந்து பறந்து சண்டையிட்டுத் தன் எல்லையை, இருப்பிடத்தை காத்துக் கொள்கிறது. சிறகை விரித்து அதி வேகத்தில் பறந்தால் அதன் பிரமாண்டம் வியப்பளிக்கிறது.
மிகவும் பொறுமையாக அடி மேல் அடியெடுத்து வைத்து நீருக்குள் சென்று வெகு நேரம் வரை கழுத்தை வளைத்து வளைத்து தன் இரைக்காக காத்திருக்கும். கண்ணில் மீன்கள் பட்டு விட்டாலோ மின்னலாக 'சடா'ரென நீருக்குள் புகுந்து லபக்கென இரையை பிடிக்கும் அழகே அலாதி. அலகில் கொத்தியிருக்கும் மீனை லாவகமாக மேலே தூக்கியெறிந்து வாய்க்குள் மென்று விட்டு ஒன்றுமே தெரியாததைப் போல் அடுத்த மீனிற்காக காத்திருக்கும்.
கக்கா போகவேண்டுமென்றால் குளத்தை விட்டு வெளியே வந்து வேலை முடிந்தவுடன் நிமிர்ந்து வீர நடை போட்டுக் கொண்டு மீண்டும் குளத்திற்கே வந்து விடுகிறது.
குளம் முழுவதும் வளைய வரும் இப்பறவை மனிதர்கள் நடமாட்டத்தை அதிகம் விரும்புவதில்லை.
குளம் முழுவதும் வளைய வரும் இப்பறவை மனிதர்கள் நடமாட்டத்தை அதிகம் விரும்புவதில்லை.
படங்கள்: The Great Blue Heron
Nice pictures...
ReplyDeleteThank you, Sudarsan.
Delete