'அமேசான் ப்ரைம்' வரிசையாக காட்டிய படங்களில் அட! ரஸல் க்ரோ நடிச்ச படமா இருக்கே! நன்றாகத் தான் இருக்குமென்று ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்த படம். அமெரிக்காவில் சாலைகளில் வண்டியோட்டிகள் சிலரின் அராஜகங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்படியெல்லாமா இருப்பார்கள் என்று யோசிக்க வைத்து விட்டது இப்படம்! இந்தப் படத்தைப் பார்த்த பிறகு இப்படியெல்லாம் கூட ஆக்ரோஷமான கொலைகார பாதகர்கள் இருக்கலாம். இனி வண்டியோட்டும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்ற பயம் வந்து விட்டது 😟
வீட்டில் குழந்தைகள் படுத்தும் பாடு, வேலையிடத்தில் ஏற்படும் மன உளைச்சல், போகிற போக்கிலே கடுப்பைக் கிளப்பும் மனிதர்கள் என்று பலரையும் கடந்து தான் நாட்கள் சென்று கொண்டிருக்கிறது. அதையே நினைத்துக் கொண்டு வண்டியோட்டிச் செல்லும் பொழுது நம்மை அறியாமலே சில தவறுகள் ஏற்படத் தான் செய்கிறது. நம்மைப் போலவே சாலைகளில் வேறு சில மனிதர்களும் வெவ்வேறு மனநிலைகளில் இருப்பார்கள் என்பதை மறந்து விடுகிறோம். கடுகளவு பிரச்னையை மலையளவு பூதாகரமாக்கும் மனிதன் ஒருவன் சாலையில் குறுக்கீடு செய்தால் என்ன மாதிரி விளைவுகள் இருக்கும் என்பதை ஹாலிவுட் ஸ்டைலில் கொஞ்சம் பரபரப்புடன் திகில் படமாக எடுத்திருக்கிறார்கள்.
தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை தன்னுடைய உடல் மொழியாலும், மிரட்டும் கண்களாலும் ஒரு கோபக்கார பழிவாங்கும் மனிதனை கண்முன் கொண்டு வருகிறார் ரஸல் க்ரோ.
பார்க்கலாம்.
தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை தன்னுடைய உடல் மொழியாலும், மிரட்டும் கண்களாலும் ஒரு கோபக்கார பழிவாங்கும் மனிதனை கண்முன் கொண்டு வருகிறார் ரஸல் க்ரோ.
பார்க்கலாம்.
No comments:
Post a Comment