Saturday, April 13, 2013

அந்த சில நிமிடங்கள்

படுக்கப் போவதற்கு முன்,  நாளை அதிகாலையில் எழுந்து என்னென்ன செய்ய வேண்டும் என்று மனம் கணக்கு போட்டு தூங்கினாலும் கடிகாரத்தின் அலாரம் சத்தம் கேட்டவுடன் போர்வையை இழுத்துக் கொண்டு இது எனக்கான நேரம் இல்லை என்று ஒரு சிறு மனப்போராட்டத்திற்கு பின் தூங்குவதில் தான் என்ன சுகம்!

சிறிது நேரம் கழித்து மீண்டும் கடிகாரம் எழுப்ப, பனிக்காலம் என்றால் இன்னும் ஒரு ஐந்து நிமிடம், இன்னும் ஒரு ஐந்து நிமிடம்  என்று சுருண்டு கொண்டு படுப்பதும்,

வசந்த காலம் என்றால் பறவைகளின் இன்னிசை கச்சேரி கேட்டுக் கொண்டே இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தது இந்த 'கிச்கிச்' சத்தம் என்று அனுபவித்துக் கொண்டே இன்னும் ஒரு ஐந்து நிமிடம் தூங்குவதும்,

மழைக்காலம் என்றால், 'சிலுசிலு' மழைத் தூறல்களின் சத்தத்தில் கண் விழித்துப் பார்த்தாலும் இல்லாத குளிரை இருப்பதாக நினைத்து இழுத்துப் போர்த்தி படுப்பதிலும்,

கோடைக்காலத்தில் அதிகாலையில் கண்ணை கூச வைக்கும் வெளிச்சம் வந்தாலும் முகத்தை மூடி படுப்பதிலும்,

ஆடி மாத காற்றில் 'ஊஊ' என்று ஊளையிடும் சத்தமும், மரங்களும் வீட்டின் பின்னால் இருக்கும் பொருட்களும் நர்த்தனம் ஆடினாலும் இதோ இன்னும் ஒரு ஐந்து நிமிடம் என்று எதுவுமே கேட்காதது போல் தூங்குவதிலும்,

குளிர்காலத்தில் இருட்டிய கோலத்தில் நேரமானது தெரிந்தாலும் ஐந்து நிமிடம் தானே என்று உறங்குவதிலும்,

இன்று விடுமுறையா என்று இல்லாத ஒரு சந்தேகம் வந்து விடுமுறை தான் என்று தெரிந்ததும் மனம் குதூகலித்து அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விடுவதிலும்,

இல்லையென்று தெரிந்ததும் அடித்து பிடித்து குழந்தைகளையும், கணவரையும் எழுப்பி விட்டு அரக்க பரக்க 'தடதட' வென்று வீட்டு வேலைகளை ஆரம்பிக்க ...


காலை நேர  அந்த சில நிமிட தூக்கம் மட்டும் ஏன் இவ்வளவு சுகமாக இருக்கிறது?

4 comments:

  1. எல்லோருக்கும் அந்த சுகம் தான்...

    ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி, திண்டுக்கல் தனபாலன்!

      Delete
  2. தூக்கத்தின் அருமையையும், பெருமையையும் நமக்கு உணர்த்துவதே அந்த அதிகாலை நேரத்து குட்டித் தூக்கம்தான்....என்ன சுகம்.:)

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...