Monday, May 6, 2013

அபூர்வ ராகங்கள்

இன்று மாலை என் மகன் படிக்கும் பள்ளி மற்றும் நாங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மற்ற ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

கிட்டத்தட்ட எண்பது மாணவ, மாணவிகளும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் ஆசிரியர்கள் என்று அந்த சின்ன ஆடிட்டோரியம் நிரம்பியிருந்தது. நானும் என் மகன் வகுப்பில் படிக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோருடன் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தேன்.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் இசைத்துறை தலைமை ஆசிரியர் இந்த மாணவர்கள் அளிக்கப் போகும் செவிக்குணவைப் பற்றி நான்கைந்து வரிகளில் அழகாக பேசி ஆரம்பித்து வைத்தார்.

வயலின் என்றாலே ஆசியர்களின் ஆதிக்கம் தான் போலும்-அழகான சீன, கொரிய , ஜப்பானிய மாணவிகளும், சில மாணவர்களும். போனால் போகிறதென்று சில இந்திய மாணவிகளும், அமெரிக்க மாணவ, மாணவிகளும். ஆசிரியர் ஒருவர் பியானோ பின்னிசைக்க, மாணவ, மாணவிகள் அழகாக பிடில் வாசிக்க, சிலர் அதில் லயித்து வாசிக்கும் போது அவர்களின் உடலசைவும் சேர்ந்து வாசித்தது கேட்க, பார்க்க அருமையாக இருந்தது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவர் பியானோ வாசித்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டனர். ஆரம்பமே படு ஜோர். அவர்கள் பியானோவில் கைவிரல்களை வைக்கும் அழகும், அதில் நர்த்தனமாடிய அவர்களின் விரல்களும், அந்த க்ராண்ட் பியானோவில் அந்த குழந்தைகள் லயத்துடன் வாசித்தது மிகுந்த பிரமிப்புடன் கேட்க சுகம், சுகமே! அவர்களும் சீன மாணவிகள் தான்.

என் மகன் வெஸ்டர்ன் புல்லாங்குழல் வாசிக்க, அவனுடன் ஆசிரியர் ஒருவரும் சேர்ந்து கொள்ள, சங்கீதம்-ன்னா கிலோ என்ன விலை என்று கேட்பவர்களையும் வசீகரித்தது :)

மூன்று மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சேர்ந்து புல்லாங்குழலில் (வெஸ்டர்ன் ) வாசித்த இசை ஏதோ ஐரிஷ் இசையை கேட்ட மாதிரியும், படங்களில் அரண்மனையில் ஆடிப்பாடும் பொழுது வாசிப்பது மாதிரியும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது.

தனியாகவும், குழுவாகவும் பாடிய 'ஒபேரா' ஸ்டைல் பாடல்கள் கேட்க நன்றாக இருந்தது. சிலது கேட்க கேட்கத் தான் பிடிக்குங்கற மாதிரி கேட்க கேட்க இனிமை.

நிகழ்ச்சியின் நிறைவாக மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்று பேர் ட்ரம்பெட் என்று பார்க்க அழகாக மூன்று பட்டன்களை மட்டுமே கொண்ட எளிய வாத்தியக் கருவியில் ஏற்ற இறக்கங்களுடன் ஒரு துள்ளலான இசையை கேட்க அவ்வளவு இனிமையாக இருந்தது.


இன்றைய மாலை ஆனந்த ராகம் பாடியது என்று சொல்லத் தான் வேண்டுமா?

2 comments:

  1. இசையால் வசமாகா இதயமெது!...
    இறைவனே இசை வடிவம் எனும்போது....!!

    :)

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...