Saturday, January 25, 2014

லதா புராணம் #101 -125

முகநூல் புராணங்கள் :)

 
வருட ஆரம்பமே அதிரடியாய் 

விண்ணும் மண்ணும் வெள்ளை அடித்த வண்ணமாய் 

நாளை வரை தொடரும் பனிப்புயலாய் ...

நான் இன்று பார்த்திபனாய் 

லதா உபதேசம் செய்து கொண்டே சாரதியாய் ...  

லதா புராணம் #101


கொண்டாட்டமா கொண்டாடினீங்க 

இருக்கு உங்களுக்கு

என்று வட்டமேசை 

மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் வானில் !!!!

நேற்றிரவு ஆரம்பித்து நாளை காலை வரை தொடர்கிறது பனிப்புயல் 

லதா புராணம் #102


அதிகம் பேசாமல் 

அதிகம் சிந்திக்காமல்

அதிகம் சிரிக்காமல்

அதிகமாக மகிழ்ந்த

அந்த சில நாட்கள்
.

நிச்சயதார்த்தம் முதல் திருமண நாள் வரை   

லதா புராணம் #104



கண்கள் இரண்டறக் கலந்து 

மௌன மொழி பேசி 

காதல் உரைத்த காலங்கள்! 
.
நிச்சயதார்த்தம் முதல் திருமண நாள் வரை   

லதா புராணம் #105



நம் வீட்டிலேயே விருந்து சாப்பாடு சாப்பிட

விருந்தினர் யாராவது வர வேண்டியுள்ளது   

படித்ததில் பிடித்தது 



பனி மேகங்களை விலக்கி

கருமேகங்களின் ஊர்வலம் வானில்...


குளிர்ந்த மழையில் 

விடியாத பொழுதில் 

பள்ளிக்குச் செல்லும் காலைப் பொழுதில் ...


வழுக்கிய சாலையில்

புகைமூட்டங்களுக்கிடையே...


என் இனிய காலைப் பயணம் 

லதா புராணம் #106



முதன் முதலில்

கைகளில் ஏந்திய

நினைவே இன்றும்

சுகமாய்...


லதா புராணம் #107


நேற்று மழை பொழிந்து

வெண் பனியை கரைத்து

மனதை குளிர வைத்தாய் ...

இன்று கடுங்குளிரில்

உடலை வருத்தி 

நெஞ்சை உறைய வைக்கிறாய் ...


இயற்கை அன்னையே ஏன் இந்தச் சீற்றம்?

http://www.nydailynews.com/news/national/deep-freeze-midwest-prepares-50-article-1.1567597

லதா புராணம் #109



ஹே, பகவான்!

வெயிலின் வெம்மையைக் காட்டி 

பனியின் குளிரை குறைப்பதாய்ச்

சொல்லி 'AAP' ஸ்டைலில் 

நம்பிக்கை கொடுத்து 

Polar Vortex -டம் மாட்டிக் கொண்டு

நம்பினவர்களுக்கும் 'ஆப்பு' கொடுத்து விட்டாயே 

லதா புராணம் #110



நிமிர்ந்த நடை,

நேர்கொண்ட பார்வை 

என வீறு நடை போட்டவர்களை 

தலை தாழ்த்தி,

நிலம் பார்த்து 

நடக்க வைத்து விட்டதே இந்த Polar Vortex !!!

லதா புராணம் #111



அதிகாலை இனிய தூக்க நேரம் மட்டும் 

சிறுத்தை ஓட்டம் ஒடுவதின் மர்மம் தான் என்ன? 

லதா புராணம் #112



நேரம் கிடைக்கும் பொழுது 

தூக்கம் வருவதில்லை. 


தூங்க நினைக்கும் பொழுது 

நேரம் கிடைப்பதில்லை. 



-இது தான் வாழ்க்கை !

லதா புராணம் #113



மதுரைல ரோட்ல போறவன் பூரா கோபமா போறான் , கோபமா வர்றான் ...    

http://www.youtube.com/watch?v=Z9rkkQXbnQs



பிடித்த உணவை சமைக்கும் பொழுது தான் 
அடிக்கடி சுவை பார்க்கத் தோன்றுகிறது   

லதா புராணம் #114


என் வீட்டு வேலைய நானே பண்ணிப்பேங்க.

நானே கடைக்குப் போய் காய்கறி வாங்கிட்டு வந்து சமைச்சு போட்டு குழந்தைகளையும் கணவரையும் நல்லா பாத்துப்பேங்க.

ரொம்ப சிம்பிளான ஆளுங்க. 

கொஞ்சமா படிச்சும் இருக்கேங்க.

மதமாற்றம் எல்லாம் அவரவர் இஷ்டம் ,
அஹிம்சை வழியில போகணும், 
எனக்குன்னு எதுவும் வேணாம்,
மத்தவங்க நல்லா இருக்கணும்-னு நெனைக்கிறேங்க.
.
முகநூலில் அப்பப்ப சுடச்சுட ஸ்டேடஸ் போடுவேங்க 
.

இப்ப சொல்லுங்க ஒரு முதலமைச்சர் ஆகிற தகுதி எனக்கும் இருக்கு தானே ? 

லதா புராணம் #115


இந்த நேரத்தில் இணைய உலகில் மிக முக்கியமான அலசல் இது தான்! 

சிக்ஸ்பேக் இல்லாமலே 'சிக்'னு வந்து 
அசத்தலா ஒரு ஆட்டம் போட்ட 'என்னங்கண்ணா'வோட 
'ஜில்லா' ஸ்கோர் பண்ணுச்சா?

'தல'யில கறுப்பு மை தடவாம 
வலம் வந்த இதுதாண்டா
'வீரம்' ஸ்கோர் பண்ணுச்சா?



லதா புராணம் #116


Mr.Surya-வை விடுதலை செய்யும் வரை 

கண்ணீர் போராட்டம் 

- வான் அரசியல்!

லதா புராணம் #117


'ஸ்வீட்' பொங்கல்

'ஸ்வீ...ட்'டா இருக்கணும்

'ஸ்வீட்'டியின் ஆணை   

லதா புராணம் #118



இவ்வளவு நாளும் படுத்தினது போதாதென்று 

இன்றும் மாடுகளை 

மிரள மிரள 

துரத்தி துரத்தி 

ஓட வைத்து 

மாட்டுப் பொங்கல் கொண்டாடி

மகிழும் மக்கள் கூட்டம் 

லதா புராணம் #119



நேற்று நடந்த கண்ணீர் போராட்டம் - முழு வெற்றி!

வானில் ஆதவன் 

லதா புராணம் #120



போலியோ இல்லாத 

நாடாக மாறியது இந்தியா...!!! 


போலி (அரசியல்)வியாதிகள் இல்லாத

நாடாக மாறுவது எப்போது?

லதா புராணம் #121



வாசலை தெளிச்சிட்டுப் 

போயிருப்பாங்க-ன்னு பார்த்தா 

கோல மாவை 

கொட்டிட்டுப் போயிருக்காங்களே! 

'வான்' அரசியல் 

உலக அரசியலையே

மிஞ்சி விடும் போலிருக்கே !!!

லதா புராணம் #122



தன் செங்கதிர்களை 

புற ஊதா கதிர்களுடன் 

நெய்து 

மேக வண்ணப் பட்டுச்சேலையாக 

வானில் உலா!

லதா புராணம் #123



மூன்று நாட்கள் விடுமுறை 

களிப்பில் 

தாயும் சேயும் 

என்ஜாய்!!!

லதா புராணம் #124



கைகளில் ஏந்தி 

மடியில் தாங்கி

நெஞ்சில் சுமந்து 

உனை 

வாசித்த தருணங்களில்

கிடைத்த சுகம்

கணினி வழி

வாசிப்பில் இல்லை.

-புத்தகம்

லதா புராணம் #125








No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...