Wednesday, January 22, 2014

லதா புராணம் 69 -100

முகநூல் புராணங்கள் :)

டிசம்பர் மாதம் வந்தாலே

குழந்தைகளுக்கு கொண்டாட்டம்   

தினம் வளரும் கிறிஸ்துமஸ் லிஸ்ட் பார்த்து

'சாண்டா'க்களுக்குத் திண்டாட்டம்   


லதா புராணம் #69


அடுப்பில் சாதம் வைத்து விட்டு 

முகநூலில் மூழ்கினால் 

அடிபிடித்திருக்கும் சாதம்   

லதா புராணம் #70


இருட்டிலேயே படமெடுத்துப் பேர் வாங்கி 

வெளிச்சத்திற்கு வந்த மணிரத்தினத்தின் படப்பாடல்களில் 

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ...


விக் இல்லாத கார்த்திக்கின் அலட்டல் இல்லாத ஸ்டைலிஷ் டான்ஸ்...

அன்றைய இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடல்!

இளையராஜாவின் இசைமழையில் ...


http://www.youtube.com/watch?v=aS5U-Mjd5WA

லதா புராணம் #71



அம்மாவிடம் சீறுபவர்கள் 

அப்பாவிடம் பொட்டிப் பாம்பாய் 

அடங்கி விடுவதன் மாயம் என்னவோ?

லதா புராணம் #72



ராக்கம்மா கைய தட்டு -ன்னு பாட்டு முழுவதும் சொடக்கு போட்டுக் கொண்டே 

டாப் கியரில் ஒரு பாட்டைக் கொண்டு செல்ல ஒரே ஒருவரால் மட்டுமே முடியும்    

குழைந்து பாட SPBஐ விட வேறு யார் இருக்க முடியும்?

இசைஞானியின் இசை, நடன அமைப்பு ..

சொல்லிக் கொண்டே போகலாம்


http://www.youtube.com/watch?v=ZAE1Ysx-VGU

லதா புராணம் #73


நாளைக்கு கண்டிப்பாக snow day இருக்கும் 

என்று சொல்லி சொல்லியே எனக்கும் 

இருக்க வேண்டும் 

என்று மனம் விரும்புதே 

லதா புராணம் #74



எப்போதும் போல் காலை பரபரப்பு...

சாவியை தேடியதில் இன்று என்னால் தாமதம்

வெளியே பனியா மழையா என்று சிணுங்க

வழுக்கல் சாலையில் சீக்கிரம் சீக்கிரம் சீக்கிரம் என்று ...

கடைசி மாணவன் பஸ் ஏறிக் கொண்டிருக்கையில்

பஸ் பிடித்து மகன் பள்ளிக்குப் போக

அப்பாடா !!!

லதா புராணம் #75



Santa இல்லை என்று 

நவம்பர் மாதம் வரை 

நம்பும் குழந்தைகள்

டிசம்பர் பிறந்ததும்

Santa-வின் வரவை 

எதிர்நோக்குகிறார்கள் !

- முரண் !

லதா புராணம் -76



விடிந்தும் விடியாத 

காலைப் பொழுது 

மனதுக்கு இனிமை 

லதா புராணம் #77



இங்கிலீஷ்-ல பேசுனா பீட்டர் 

தமிழ்-ல பேசுனா புலவர் 

ஹிந்தி-ல பேசுனா பண்டிட்

ஒண்ணுமே பேசலன்னா மன்மோகன் 

பேசிக்கிட்டே இருந்தா நாராயணசாமி

படித்ததில் பிடித்தது :)



கூந்தலில் அலைபாய்ந்து

காது மடல்களை வருடி

நெற்றியில் தவழ்ந்து

கண்களை மூடி

நாசியை உரசி

கன்னத்தில் முத்தமிட்டுச் செல்கிறது

அதிகாலை பனிக்காலத் தென்றல்   

லதா புராணம் #78



முண்டாசு கட்டி 

மீசை முறுக்கிய 

பாரதிகள் 

பள்ளி மேடைகளில் !!!

லதா புராணம் #79



தங்க்லீஷ்-ல பேசடா 

தலை குனிந்து நில்லடா 

லதா புராணம் #80


சமீபத்தில் அழகுசாதனப் பொருட்கள் விற்கும் கடைக்கு மகளுடன் சென்றிருந்தேன். குதிரைவால் போட்டு முதுகை காட்டியபடி நின்றிருந்தவள் மெதுவாக சிரித்துக் கொண்டே திரும்பி,

How can I help you என்று கேட்க ... . . . . . . . . . . . . . . 
பெண் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா.....

அவள் தலையை ஆட்டிஆட்டி பேசிய விதமும், ஒரு விரலை கன்னத்தில் வைத்துக் கொண்டு நாங்கள் பேசியதைக் காது கொடுத்து கேட்ட விதமும், அழகாக மையிட்ட கண்களும், நேர்த்தியான மேக்கப் -பும், சிரித்துக் கொண்டே நாங்கள் கேட்டதையும் வேறு சில கேட்காத பொருட்களையும் கொடுத்து விரிவாகச் சொல்ல...

கனிவுடன், சிரித்த முகத்துடன் வாடிக்கையாளர்களிடம் பேசும் இவர்களிடம் எந்தவித மனக்கிலேசமும் இன்றி பேச முடிகிறது.

இப்பொழுதெல்லாம் கடைகளில் ஆண்பால், பெண்பால் தவிர்த்து ஆண்பெண் பாலாரும் இருக்கிறார்கள்.

நியூயார்க்கில் அதிகமோ?

லதா புராணம் #81



You are under arrest என்று 

தங்கப்பதக்கம் சிவாஜி பாணியில் 

பனி பகவான் 

Mr.Surya வை...   

லதா புராணம் #82



முடியாது, முடியாது, முடியாது! சில விஷயத்தை யாராலும் மாத்த முடியாது! 

* காலிஃப்ளவரை தலையில வைக்க முடியாது.

* கோல்ட் ஃபில்டரை அடகு வைக்க முடியாது.

* வீணா போன மெசேஜ் வந்தாலும் உங்களால படிக்காம இருக்க முடியாது.

- எங்கேயோ படித்தது    



இன்று மதியம் முதல் 

'ஆரம்பம்' 

என்று சொன்னதாலோ என்னவோ 

கூட்டம் அலைமோதுகிறது   

லதா புராணம் #83



உள்ளங் கவர் கள்வன் 

வானில் உலா!

லதா புராணம் #84



திருமணத்திற்குப் பிறகு ஆண்களின் 
சுதந்திரம் பறிபோய் விடுகிறது 
என்று தாம்தூம் என்று கூவுபவர்கள் (நீயா நானா - விவாதம் )
பெண்களின் நிலையைப் பற்றி பேசாமல் ...

போயா போ !! 

லதா புராணம் #85



செவ்வாய்க்கிழமை தானா? 

வெள்ளிக்கிழமை ஆன மாதிரி இருக்கு!

எல்லாம் இந்த பனிப்புயல் பண்ற வேலை 

லதா புராணம் #86



என் வீட்டின் மேல் 

விழுந்த பனி மழையே 

இன்று போய் அடுத்த வருடம் வா 


இப்படிக்கு

உன் ரசிகை 


லதா புராணம் #87



நியூயார்க்கில் 

போன வருடம் மூட்டை பூச்சி 

இந்த வருடம் Asian கரப்பான் பூச்சி 

அடுத்த வருடம் ????

லதா புராணம் #88



இயற்கை தேவன் தீட்டிய 

வண்ண ஓவியத்தில் 

நீல நிற வானின் 

சூரிய நமஸ்காரம் !

லதா புராணம் #89



பிரிப்பதற்காகவே 
சேர்க்கப்படுகிறது 
#சொத்து 

படித்ததில் பிடித்தது 



நேற்று வரை 

புது மணப்பெண் போல் 'பளிச்'சென்று இருந்த பனிக்குவியல்கள் 

இன்று முதல் 

சமையல் அறையில் வாடி வதங்கும் பெண்ணைப் போல்... 

லதா புராணம் #90



ஓய்வெடுக்கச் சென்ற பறவைகள், அணில்கள் 

எல்லாம் மீண்டும் தலையெடுக்க 

'ஜில்'லென்று பனிக்காலத்தில் ஒரு வசந்த காலம்!

லதா புராணம் #91



சோன்பப்டியை பிடிக்காதோர் ...

நான் சொல்ல விரும்பவில்லை 

லதா புராணம்#92



காலையில் இருந்து வந்த செய்திகளை கேட்டு பிரார்த்தனைகளுடன் விடியல்.



லதா புராணம் # 93



குடும்பத்தின் மூத்த மகனாக
சிறுவயது முதல் குடும்ப பாரங்களைச் சுமந்து 
தனக்கென ஒரு வாழ்க்கையும்
கோட்பாடுகளையும் வகுத்து 
பணியிடத்திலும், வெளிவாழ்க்கையிலும் 
நற்பெயரைப் பெற்று 
பல நல்ல விஷயங்களை வாழ்வில்
கடைபிடிக்கக் கற்றுத் தந்த
மாமனிதர்
எங்கள் மாமாவின் 'ஆத்மா' சாந்தி அடையட்டும்.


அக்கறையே இல்லாமல் அதிகம் கேட்கப்படும் கேள்வி
நீங்க எப்படி இருக்கீங்க?

படித்ததில் பிடித்தது 



ஐயப்பன் கோவிலுக்குப் பெண்கள் போகக் கூடாது 
என்றதை ஏற்றுக் கொண்ட மனம் 

சுவாமி நாராயண் கோவிலில் பெண்கள் 
பூஜை நேரத்தில் முன்னே அமரக் கூடாது 
என்றவுடன் பெண்ணியம் பேச ஆரம்பித்து விடுகிறது 

மனம் ஒரு குரங்கு 

லதா புராணம் #94



ஹாய் ஹௌ ஆர் யூ ?

ம்ம்ம். Cold டே டுடே !!

Freezing !

என்று ஒரு சிறு புன்முறுவலுடன் 

சிநேகமாக ஆரம்பிக்கும்

காலை நேரச் சிறுசிறு உரையாடல்களே

அன்றைய நாளை உற்சாகப்படுத்துகிறது ! !


லதா புராணம் #95



கஷ்டப்பட்டு ஒரு வழியா தீர்மானம் எல்லாம் போட்டு உடல் எடையை குறைக்கலாம்-னு வருடத்தில் முதல் தேதியில நினைக்கிறப்பவே , ம்ஹும் என் பிறந்த நாள் வருது, வெளியில போய் குடும்பத்தோட சாப்பிடணும்-னு மகளின் அன்புத் தொல்லை, நான் விடுமுறை முடிந்து போகிறேன் அதனால் என்று மீண்டும் ஒரு முறை, திருமண நாள் என்று ...

சரி பிப்ரவரி-யில ஆரம்பிக்கலாம்-ன அதே பல்லவிய மகன் பாட,

ஓகே, மார்ச் மாசம் - கண்டிப்பா முடியாது ஒண்ணுக்கு இரண்டு பிறந்த நாட்கள்..

அப்பாடா தமிழ் வருடப் பிறப்பு வந்தாச்சு , ஆரம்பிக்கலாம்-னா , இந்த கெட்-டுகெதர் அந்த கெட்-டுகெதர் ...

கோடை மாதங்கள் - சொல்லவே வேணாம், ஊர் சுத்த, உறவுக்காரர்கள் வர, போக --அதுவும் போச்சா?

அப்பாடா ஸ்கூல் திறந்தாச்சு இனி என் வழி தனி வழி-ன்னு ஆரம்பிச்சா விநாயகர் சதுர்த்தி , கொலு, சரஸ்வதி பூஜை , தீபாவளி ன்னு ஒண்ணு மாத்தி ஒண்ணு வருதா, ஒவ்வொரு பலகாரம், படையல் னு முடிய...

ம்ம், இப்ப ஆரம்பிக்கலாம்-னா thanksgiving celebrations , x -mas வருதா...
குளிரும் சேர்ந்துச்சா... அடுத்த புது வருஷமும் வந்துச்சா ...

வருஷம் பூரா குழந்தைங்க மிச்சம் வைக்கிறது, கொஞ்சூண்டு தானே இருக்கு, இதை எடுத்து வைக்கணுமா-ன்னு அதையும் மிச்சம் வைக்காம சாப்பிட்டு...

அதுக்குள்ள ரொம்ப நாளாச்சு ஊருக்குப் போகணும்-னு மாதிரி தோணுமா, அங்க போய் எந்த தெருவுல எந்த ஹோட்டல்-ல என்ன ஸ்பெஷல்-னு ஒன்னு விடாம சாப்பிட்டாச்சா, உறவுக்காரங்க பாசமா கூப்பிட்டு விருந்து வைக்க அதையும் தட்ட முடியாம, வரும் போது மறக்காம பெட்டிகள்ல அடிச்சு வச்சு எடுத்துட்டு வர்றதை நாய் மோப்பம் பிடிக்காம காப்பாத்திட்டு வந்து அதையும் ...

நடுநடுவில மானே தேனே மாதிரி நண்பர்கள் 40வது , 50வது பிறந்த நாள், அவர்கள் வீட்டு விசேஷங்கள் அப்புறம் புதுமனைப் புகுவிழா, வளைகாப்பு, பூஜைகள், மாதம் ஒரு முறை ஒரு ரெஸ்டாரன்ட், ஒரு இனிப்பு, புது ரெசிபி-ன்னு போட்டுக்கணும் சரியா??

இப்படியாகத் தானே ஒவ்வொரு வருடமும் வந்து போக
ஏறிய எடையும் இறங்கிய பாடில்லை ...

ஒரே தீர்வு - வருஷம் வந்தா தீர்மானம் போட வேண்டியது. அதுலயே பாதி எடை கொறஞ்ச மாதிரி மனசு லேசாயிடும். கண்டிப்பா நடக்கும்-னு ஒரு சின்ன நம்பிக்கை வரும்.

ஆப்டர் ஆல் நம்பிக்கை தானே வாழ்க்கை, என்ன நான் சொல்றது ?

  

லதா புராணம் #96


பனி மேகங்களை விரட்டி 

குளிரில் வாடும் உயிர்களுக்குப் 

புத்துணர்ச்சி கொடுக்க 

தன் சிறகுகளை வானில் விரித்து 

தாயுமானவனாய் 

சூரிய பகவான்!

லதா புராணம் # 97



2013-ல் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையாவின் தரிசனம். 

2014-ல் என் கந்தன் எனக்குப் பாடம் ...

அனைவருக்கும் 2014 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !!!


லதா புராணம் #98



நாளை ஞாயிற்றுக்கிழமை மாதிரியே தோணுகிறது... 

எனக்கு மட்டும் தானா ??  

லதா புராணம் #100




No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...