1994 ருவாண்டாவில் ஹூட்டு, டுட்சி என்ற இரு குழுக்களுக்கிடையே நடந்த போரின் இனப்படுகொலையை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் 2004ல் வெளிவந்த 'ஹோட்டல் ருவாண்டா'. ஃப்ரெஞ்ச் ஹோட்டல் நிர்வாகியாக வருபவர் தன் குடும்பத்தினரையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற போராடுவது தான் கதை. அரசியல் ஆதாயம் தேடி இனப்படுகொலை நடத்தியவர்கள், லஞ்சம் ஊழல் விரித்தாடும் அரசாங்கம், அகதிகளின் பரிதாப நிலைமை, மக்களை காப்பாற்ற நினைக்கும் UN என அழகான திரைக்கதை. நடித்திருந்தவர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருந்தார்கள்.
1994ல் இவ்வளவு பெரிய உயிரிழப்பும் கலவரங்களும் அரங்கேறியிருக்கிறது. அதே காலகட்டத்தில் உலகின் மறுபகுதியில் கணினி மற்றும் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகம் இல்லாததால் என் போன்ற பலரும் அறிந்திடாத விஷயங்களுள் இதுவும் ஒன்று. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் கூட கேள்விப்பட்ட மாதிரி நினைவில்லை எனக்கு. இப்படத்தின் மூலமே இத்துயர நிகழ்ச்சியை உலகில் பலரும் அறிந்திருக்கலாம். அதில் ஒரு காட்சி நிஜமாகவே மனதை உலுக்கி விட்டது.
😢😢😢
No comments:
Post a Comment