Saturday, July 6, 2024

ஶ்ரீவாரி ஶ்ரீபாலாஜி திருக்கோவில்

நியூஜெர்சியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் ஶ்ரீவாரி ஶ்ரீபாலாஜி திருக்கோவிலைக் கட்டிக்கொண்டிருக்கும் பொழுதே பெருமாளை தரிசித்திருக்கிறோம். கட்டுமானப் பணியிலி்ருந்தவர் மதுரைப்பக்கம் என்றவுடன் கூடுதல் மகிழ்ச்சி. ஶ்ரீரங்கம் அகோபில மடத்தைச் சேர்ந்த கோவில். இரு வாரங்களுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருந்தது. தாயாருக்குத் தனிக்கோவில். சிறப்பு அலங்காரங்களுடன் தாயார் வீற்றிருந்த கோலம் கொள்ளை அழகு!
பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. அலங்காரமில்லாத பெருமாள் தீபாராதனையில் மனதை கொள்ளை கொள்கிறார். சிறிய

கோவில் தான் என்றாலும் பூரண திருப்தி தருகிறார் பாலாஜி.



ஓம் நமோ நாராயணாய


No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...