Saturday, December 15, 2012

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே - 3

இரண்டாம் வருடம், கணிப்பொறியியல்  துறை என்று முடிவான பிறகு, மீண்டும் புது மாணவர் கூட்டம். நான், மேகலா, லதாமணி மற்றும் பிற வகுப்புகளிலிருந்து வந்த மாணவ, மாணவியர்கள். இந்த வகுப்பில் துர்கா, வீணா, விஷாலாக்ஷி, சுகந்தி, அருணா, அருணாகுமாரி, அருணாதேவி, ஜெயபாரதி, சாந்தி(திருநகர்), சுகந்தி, ராஜம், மலர்விழி, மகேஸ்வரி, துர்காராணி, ஆன்சி, ஜாய்ஸ், ப்ரிசில்லா, டெல்லா, அனிதா, உமாதேவி, சாந்தி, லலிதா,மீரா காந்தி, ப்ரீத்தி என்று மாணவிகளும்,

மாணவர்களில் ஏஞ்சலோ, பால்கி, சந்திரசேகர், பாலக்ருஷ்ணன், ஸ்ரீதரன், கிஷோர், சதீஷ், கண்ணன், ஸ்ரீனிவாசன், செந்தில், பாஸ்கரன், கடற்கரையாண்டி, பெரியசாமி, ரமேஷ், ராதாகிருஷ்ணன், குகராஜன், பிரபாகரன், முரளிதரன், ராஜசேகர், கனக சுந்தர் ராஜன், 'கணிதப்புலி' லக்ஷ்மணராஜ், சாலமன் ஹென்றி, சங்கரலிங்கம், நாராயணன், முருகவேல், மகேஷ், சரவணன், யாகூப், சிவகுமார், ஈஸ்வரன்  என்று இன்னும் பலர். இவர்களுடன் தான் மூன்று வருட கல்லூரி வாழ்க்கையும்.


Electronics வகுப்பிலிருந்து ராஜி, Electrical வகுப்பிலிருந்து அமர்தீபா இன்னும் பலர் நட்பும் கிடைத்தது.
இரண்டாம் வருடம் மெயின் பில்டிங்கில் வகுப்புகள் இருந்தன. Material Science-Prof. மீனாக்ஷி சுந்தரம் வகுப்பு ஒரு இனம் புரியாத பீதியை ஏற்படுத்தியது. ஒன்றும் புரியவில்லை. அத்தனைக்கும் மிக குறைந்த அளவு பக்கங்கள் கொண்ட புத்தகம். எப்படி புரட்டினாலும் ஒன்றுமே விளங்கவில்லை:( செமி கண்டக்டர் அது இது என்று..இன்று வரை அந்த பாடம் மனதளவில் ஒரு பயத்தையே எழுப்பியுள்ளது. இங்கு பலரும், Material Science-ல் டாக்டரேட் வாங்கியிருப்பதை பார்த்தால் தெய்வமே என்று தோணும்! என் மகளுக்கும் அந்த பாடம் உள்ளது. அவளுடைய புத்தகத்தை வாங்கி படித்து இப்பதாவது புரிகிறதா என்று பார்க்க வேண்டும்!

அதே போல் தான் Circuit Theory பாடமும். resistor , capacitor, கரண்ட் இப்படி போனால் பிளஸ், அப்படி போனால் மைனஸ் என்று தலையை பிய்த்துக் கொள்ள வைத்தது. ஒரு வழியாக BASIC, FORTRAN என்று படிக்க ஆரம்பித்தோம். எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் லேபுகளும் நன்றாக புது விதமாக இருந்தது.

எலெக்ட்ரிக்கல் லேபில் பெரிய பெரிய என்ஜின்களை சுற்றி நின்று கொண்டு, அன்று பண்ணவிருக்கும் experiment- க்குத் தேவையானவைகளை எழுதி மேடத்திடம் காண்பித்து விட்டு, லேப் அட்டெண்டரிடம் கொடுத்தால் அவரும் அந்த சாமான்களை கொடுப்பார். பிறகு படம் வரைந்து, ரீடிங் பார்த்து observation நோட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் சீக்கிரம் லேப் முடிந்து விடும் :)

Computer Organisation என்று ஒரு வகுப்பு. வெறும் தியரி தான். படிக்க interesting ஆக இருந்தது. COBOL & Pascal Prof.ராம்ராஜ் எடுத்தார். அந்த வகுப்புகளும் நன்றாக இருந்தது. syntax மறக்காமல் COBOL ப்ரோக்ராம் எழுதுவதற்குள் ஒரு வழியாகி விட்டது. அநியாயத்திற்கு ஒரு சிறிய தப்பிற்கு நூறு errors காண்பித்து.. அங்கு வேலை பார்த்தவர்களின் துணையோடு ப்ரோக்ராம்கள் எழுதி...பச்சை வண்ணத்தில் no errors என்று ஸ்க்ரீனில் வந்தவுடன் வரும் பரவசம் இருக்கே....

இரண்டாம் வருடத்திலிருந்து முனிச்சாலை பஸ்-ஸ்டாப்பில் 31 ஆம் நம்பர் பஸ்சிற்காக காத்திருந்து போனோம். அவ்வளவு கூட்டம் இருக்காது. கார்த்திகை மாதம் வந்து விட்டால், தளும்பும் பால் தூக்குகளுடன் கூட்டம் அலைமோதும். சமயத்தில் பஸ் சீக்கிரம் போய் விட்டால் 'லொங்கு லொங்குவெ'ன்று கீழவாசல் வரை நடக்க வேண்டும்.  LDC , Fatima கல்லூரி மாணவிகளும் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் நேரமது. எப்பொழுதும் நல்ல கூட்டம் இருக்கும் அந்த பஸ் ஸ்டாப்பில். இந்த பஸ்களில் ஏறினால் ஒரு பிரச்சினை. மாணவர்கள் அவர்களுடைய புத்தகங்களை கேட்காமலே வச்சுக்கோ என்று தூக்கிப் போடுவார்கள். இருக்கிற பிரச்சினை போதாதென்று இதை வேற கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எரிச்சலாக இருக்கும். திங்கள், கார்த்திகை மாதம், முருகன் ஸ்பெஷல் தினங்களன்று கல்லூரியிலிருந்து வீடு போய் சேர்வதற்குள் போதும்,போதும் என்றாகி விடும்.

என் அக்கா சிவில் பிரிவும், என் மாமா மகள் electronics ம் எடுத்து தனித்தனியாக பிரிந்தோம். என் அக்காவின் தோழிகள் ராதா, சாருலதா, பாலா எப்பவுமே ஒன்றாக இருப்பார்கள், ஒன்றாகவே வகுப்புக்கு போவார்கள். அவர்கள் வகுப்பு லேடீஸ் ரூம் பக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு வசதியாக போய் விட்டது. எங்களுடைய சீனியர் electrical வகுப்பு, காதலர் சோலைகள் மாதிரி இருக்கும். ஒரு ஆசிரியரின் வகுப்பில், யார் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம். பலரும் ஜோடி, ஜோடியாக உட்கார்ந்திருப்பார்கள். எவ்வளவு ஜோடி உண்மையிலே வாழ்க்கையில் சேர்ந்ததோ! எனக்கு தெரிந்து, ஒரு ஜோடி, நான்கு வருடங்கள் காதலித்து, கல்யாணமும் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்குப் பிறகு பிரிந்து விட்டனர். வருத்தமாக இருந்தது அதை கேள்விப்பட்டவுடன்.

இரண்டாம் வருடம் நன்றாக போனது. இரண்டாம் வருட டூரும் நன்றாக இருந்தது. ஊட்டி போனோம். எங்களுடன் சாந்தி மற்றும் மின்பொறியியல் துறையிலிருந்து இன்னொரு பேராசிரியையும்(சுகுனேஷ் மேடம் ) வந்தார்கள். எங்களை வழியனுப்ப வந்த கூட்டம் மாணவர்களை உயரத்தில் தூக்கிப் போட்டு பிடிப்பதுமாய் கலாட்டா செய்து வழியனுப்பினார்கள். கடைசி சீட்டில் பாட்டில்கள் உருண்டதாக சொன்னார்கள். யாமறியேன் பராபரமே!
நன்றாக ஆட்டம் பாட்டமாகவே ஆரம்பித்தது அந்த பயணம். ஓசூர் அருகே ஏதோ ஒரு காரணத்திற்காக சாலை முழுவதும் மறிக்கப்பட்டு ஒரே போக்குவரத்து நெரிசல். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் லாரிகளும், பஸ்களுமாய். நல்ல வெயில். அந்த இடத்தை சாதகமாக்கி கொண்டு இளநீர் விற்பவரிடமிருந்து இளநீர் குடித்து எப்படா ஊட்டி போய் சேருவோம் என்றாகி விட்டது. ரோடு கிளியராகி ஊட்டி மலைப்பாதையில் ஏறும் பொழுது ஒரே தலை சுற்றல். நடுவில் ஓரிடத்தில் நிறுத்தி சோடா, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து குடித்தோம் பலரும். மீண்டும் மலை ஏற்றம். ஒரு வழியாக ஊர் வந்து சேந்தோம்.

நல்ல குளிர். அடுக்கடுக்காக இருந்த அந்த நிலப்பரப்பு பார்க்க ரம்மியமாக இருந்தது. மாணவிகளுக்கு சில அறைகளும், மாணவர்களுக்கு சில அறைகளும் என்று ஒதுக்கப்பட்டிருந்தன. அடுத்தநாள் Botanical Garden, Boat ride போக கிளம்பினோம். எங்களை மாதிரியே சிவகாசியிலிருந்து மாணவர்கள் பட்டாளம் ஒன்றும் வந்திருந்தது. அவர்களிடம் சிலர் பேசினார்கள். இன்னும் சில இடங்களுக்கும் சென்றோம். மழையில் மாட்டிக் கொண்டு அப்படியே மார்க்கெட்டும் போனால் எல்லாம் பிரெஷ் காய்கறிகள். வேண்டிய மட்டும் வாங்கி கொண்டு பஸ்ஸை நோக்கி ஓடினோம் மழையில் நனைந்தபடி! இந்த டூர் மட்டும் தான் நான் போன கல்லூரி டூர் :(

இந்த வருடத்தில் ரிலீஸ் ஆன அக்னி நட்சத்திரம் படத்தை சௌராஷ்டிரா இஞ்சினியரிங் ஸ்டுடண்ட்ஸ் அசோசியேஷனுடன் சேர்ந்து பார்த்தது நன்றாக இருந்தது.



நினைவலைகள் தொடரும்...

13 comments:

  1. கனக சுப்பிரமணியன் or கணக்கு சுந்தரராஜன்?

    ReplyDelete
  2. uhoh! யாராவது திருத்தணுமே! கணக்கு- ன்னு கூப்ட்டதாலே முழுப் பெயரும் மறந்துருச்சே :(

    ReplyDelete
  3. கணக்கு சுந்தரராஜன் என் பள்ளித் தோழன். கணக்கு என்பது அவர்களின் குடும்ப பெயர். +1ல் பக்கத்துப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம்.பாடம் நடக்கும் போது அநியாயத்துக்கு சந்தேகம் கேட்பான். இவனுடைய ஆர்வக் கோளாறில் சமயத்தில் நான் மாட்டிக் கொண்டு இம்சைப் பட்டதுண்டு. அவனுக்கு பயந்தே +2ல் கடைசி பெஞ்சுக்கு ஓடிவிட்டேன்.

    அவனுக்கு ஏதோ உடல்நலம் சரியில்லை என்றும், தற்போது அவன் இல்லை என்றும் கேள்விப் பட்டேன். உறுதியாகத் தெரியவில்லை.:(

    ReplyDelete
  4. Who is parthasarthy in our class?... unable to recollect. Btw, the other staff who accompanied us in 2nd year tour was Sukunesh ma'am

    Hmm... u did not make it to 3rd / final year tours?... so sad . Would miss your writeups.. :(

    ReplyDelete
  5. கணக்கு - திருமங்கலம் குரூப், சரவணன்.பெயர் திருத்தத்திற்கு நன்றி.

    ReplyDelete
  6. Guharajan - Thanks for the name. I got it now :)

    ReplyDelete
  7. சரவணன் - இன்று எனக்குத் தெரிந்து என்னுடன் படித்தவர்கள் மூன்று பேர் உயிரோடு இல்லை. பால்கி, கணக்கு இன்னும் ஒருவர் :(

    ReplyDelete
  8. Guha Rajan - I think Parthasarathy was a hostel student and always With Kadarkaraiyaandi. That's what I thought :(

    ReplyDelete
  9. படத்தில் வலது ஓரத்தில் உயரமாய் நிற்பது ரமேஷ்..தானே!, போன வாரம் கூட மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன். பழைய பங்காளி :)

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. yes , சரவணன். படத்தில் இருப்பவர்கள் - ரமேஷ், பிரபாகரன்,குகராஜன் சுதாகர், ஸ்ரீனிவாசன், ஸ்ரீதரன் , கண்ணன், சங்கரலிங்கம், ராதாகிருஷ்ணன், சாலமன் ஹென்றி.

    ReplyDelete
  12. Latha, Parthasarathy was with us in the first year, and then moved onto EEE. The person who stays with Kadarkarai most of the time was Periasami. BTW, Partha met his fate through a bike accident in 2008, and is not alive, now. -- Radha Bala

    ReplyDelete
  13. Thanks, Radha. I remembered Periasami's face and I know that he stayed in the hostel. But, got confused with the name. Yes, I heard about the accident too! That was terrible! Thanks for the correction, Radha!

    ReplyDelete

அங்கிள் சாமின் உண்மையான முகம்

சில வாரங்களுக்கு முன் அமேசான் பிரைமில் படங்களைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்த பொழுது அகப்பட்டது தான் 'Rainmaker'. கதாநாயகன் யார் என்...