கணவனை விட தான் அதிகம் சம்பாதிக்கிறோம் என்ற நினைப்பில் சில பெண்கள் ஆண்களையும் அவர்கள் குடும்பத்தாரையும் துச்சமாக எண்ணுகிறார்கள். நடத்துகிறார்கள். இதுவும் உண்மை.
வெகு சிலரே, “நம்” குடும்பத்துக்காக என்று நினைத்து ஒருவரின் உயர்ச்சியில் மகிழ்கிறார்கள். வீட்டு வேலைகளில் பங்கு கொள்கிறார்கள்.
வேலைக்கே செல்லாமலும் கணவரை விட குறைந்த வருவாய் இருந்தாலும் அடிமை போல நடத்தும் பெண்களும் உண்டு.
தனிநபர் வருமானம் என்றால் பெண்ணை அடிமையாக நடத்தும் ஆண்களும் உண்டு என்பது தெரிந்ததே.
வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்டது. பெண் அதிகம் சம்பாதித்தால் ஆண் அச்சப்படத் தேவையில்லை. அதனால் உண்டாகும் மனச்சிக்கல்களின் முடிவில் இருவரின் மகிழ்ச்சியையும் குடும்பத்தையும் அழித்து விடும். அதிகம் சம்பாதிப்பதால் அதிகாரம் செய்யும் உரிமையும் தனக்குத்த்தான் என்று எண்ணுகிற வீட்டில் அமைதியும் சந்தோஷமும் விடைபெற்று விடும்.
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இல்லங்களில் அன்பான, அழகான வாழ்க்கைக்கு இரு மனங்கள் இசைந்து செல்தல் அவசியம். ஒருவருக்கொருவரின் விட்டுக்கொடுத்தலும் அரவணைப்பும் உற்சாகமூட்டுதலும் பேரின்ப பெருவாழ்க்கைக்கு அத்தியாவசியம். இதற்கு மனம்விட்டுப்்பேசி பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வுகாணல் ஒன்றே இன்பமான இல்லறத்துக்கு வழிவகுக்கும்.
பங்கு கொண்ட பெண்கள் பலரும் தாங்கள் ஏதோ தங்கள் கடமையிலிருந்து (மனைவி, தாய்) விலகி வேலைக்குச் செல்வதாக மன்னிப்பு கோரும் மனநிலையிலேயே பேசுவது போல எனக்குத் தோன்றியது. மனைவி வேலைக்குச் சென்றால் குடும்பத்திற்கு நல்லது என்று நினைக்கும் கணவன் அவளுக்கு ஒத்தாசையாக அனைத்து விஷயங்களிலும் இருப்பான். இருக்கிறான். அப்படி இல்லாமல் குடும்பத்திற்காக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யாமல் இருக்கும் கணவர்கள் தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
உணர்ந்தோர் வாழ்கிறார்கள். மற்றலரெல்லாம் “விதியே” என நடமாடுகிறார்கள்.
உணர்ந்தோர் வாழ்கிறார்கள். மற்றலரெல்லாம் “விதியே” என நடமாடுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண்மணியைத் தான் ஃபேஸ்புக் போராளிகள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரை தினமும் வேலைக்குச் செல்லும் பெண் பாத்திரம் கழுவி வைக்கச் சொல்கிறாள் என்று சொன்ன அவர் கணவரை ஏனோ ஓரவஞ்சமாக விட்டுவிட்டது ஆணாதிக்க திராவிட சமூவம்😏
No comments:
Post a Comment