Wednesday, January 4, 2023

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

நம்முடைய தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதம் பிறந்தாலும் உலகத்தினர் அனைவரும் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டில் அனைவருக்கும் நலமும் வளமும் நல்ஆரோக்கியமும் கிட்டிட என் வாழ்த்துகள்! 

வருட துவக்கத்தில் நண்பர் பிரகாஷ் ராஜகோபாலிடமிருந்து வந்த முதல் வாழ்த்தும் கூடவே என்னுடைய முதல் புத்தகம் "மகாபாரதக் கிளைக் கதைகள்" பிரசுரமான செய்தியும் கிடைத்ததில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும்  மிக்க மகிழ்ச்சி. சுவாசம் பதிப்பகம் மூலமாக வெளிவரும் இப்புத்தகம் இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் இடம்பெறுகிறது என்ற இனிப்பான செய்தியுடன் துவங்குகிறது என்னுடைய 2023. இந்தப் புத்தகத்தை இந்தியாவில் இருப்பவர்கள் ஆன்லைனில் வாங்க விருப்பமுள்ளவர்கள் இங்கே சென்று வாங்கலாம். https://www.swasambookart.com/books/9789395272438
வெளிநாடுகளில் இருப்பவர்கள் வாட்ஸப் (+91 8148080118 ) மூலம் தொடர்பு கொண்டு வாங்கலாம்.


படித்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். முதல் பிரதியில் இருக்கும் தவறுகள் இரண்டாவது பிரதியில் சரிசெய்யப்படும்.

உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...