Monday, August 7, 2023

தரம் சுவை மனம்?

மூச்சுக்கு முந்நூறு தடவை 'தமிழ்' 'தமிழ்' என்று முழங்குபவர்கள் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் தான் மொழியைக் கொலை செய்வதும் அதுவும் ஊடகங்களில் பேசுபவர்களாகட்டும் தலைப்புச் செய்திகளாகட்டும் பிழைகள் இல்லாமல் இருப்பதில்லை. முன்பு அதிக கவனம் எடுத்துக் கொண்டவர்கள் இப்பொழுது 'ஜஸ்ட் லைக் தட்' என கடந்து விடும் அலட்சியப்போக்கு ஆபத்தானது. நேற்று ஜீ தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான பாட்டுப் போட்டியில் ஒரு காட்சி. இட்லி பொடி விளம்பரம். 'தரம் சுவை மனம்' என்று இருந்தது. எனக்குத் தான் தவறாகத் தெரிகிறதோ?

இத்தனை பெரிய நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்ப்பார்கள்? நிகழ்ச்சியை நடத்துபவர்களின் கவனத்திற்கு இந்த தவறு தெரியாமல் இருந்தது ஆச்சரியமே! இல்லையென்றால் இதை வைத்து ரேட்டிங் கூடும் என்று நினைத்திருப்பார்களோ?

ஊடகங்களின் தரம் காற்றில் பறக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. காட்டுக்கூச்சல் போடும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை, உடலை வைத்துக் கேலிசெய்யும் மலிவான தரக்குறைவான பேச்சுகள், வேறு வழியின்றி வாங்கிய காசிற்கு மௌனியாய் நடுவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

என்னவோ போடா மாதவா!




2 comments:

  1. உண்மைதான் சகோதரி . பல செய்தி தொலைக்காட்சிகளில் படு மோசமான எழுத்து ,கருத்து பிழைகளை பார்க்க முடிகிறது .. யூடியுப்பில் பல பிரபல்யமான சேனல்களில் தப்பும் தவறுமாய் தலைப்புக்கள் ,மெனக்கெட்டு அதை எடுத்து சொன் னாலும் மீண்டும் அதே தவறுகள் தொடர்கின்றன .
    யாரை நோவது என்று தெரியவில்லை .

    பத்து சொற்கள் தமிழில் கதைத்தால் அதில் ஆறு சொற்கள் ஆங்கிலத்தில். தமிழை ஹிந்தி ஆக்கிரமித்து விடும் என்றார்கள் இப்பொழுது ஆங்கிலம் முழுமையாக ஆக்கிரமித்து விட்டதே ... தமிழை தமிழாக கதைபவர்களை பார்ப்பது அரிதாக இருக்கிறது தமிழ்நாட்டில் ....

    ReplyDelete
    Replies
    1. வருத்தமான விஷயம். நம்மிடம் இருக்கும் அலட்சியம் தான் காரணம் :(

      Delete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...