Saturday, April 27, 2024

'கனெக்ஷன்ஸ்' விளையாட்டு

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் 'Wordle' என்ற விளையாட்டை 2022ல் அறிமுகப்படுத்தி வார்த்தை விளையாட்டில் ஆர்வம் இருப்பவர்களிடையே அது மிகவும் பிரபலமாகி வைரல் ஆனது. இந்த வருடம் 'Connections' என்றொரு புதிய விளையாட்டை அறிமுகப்படுத்தி அதுவும் பிரபலமாகி வருகிறது.

 

இதில் 16 வார்த்தைகள் 16 கட்டங்களில் இருக்கும். அதில் நான்கு வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்குள் அடங்கும். அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் அனைத்து வார்த்தைகளையும் கவனமாக பகுப்பாய்வு செய்து அதன் கருப்பொருளையும் கருத்தில் கொண்டு வார்த்தைகளைத் தேட வேண்டும். தவறுகளைத் திருத்திக்கொள்ள நான்கு வாய்ப்புகள் தரப்படுகிறது. ஒரே ஒரு முறை மட்டும் நான்கு தொடர்களையும் கண்டறிய முடிந்தது. பெரும்பாலும் ஒன்றோ இரண்டில் மாட்டிக் கொண்டு விடுகிறேன். நிறைய ஆங்கில வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் தெரிந்திருந்தால் விளையாடுவது எளிதாக இருந்தாலும் கருப்பொருள் தெரிந்து அதோடு தொடர்புபடுத்துவது தான் இந்த விளையாட்டின் மையக்கரு.
விளையாடித்தான் பாருங்களேன்😎😎

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...