Monday, October 1, 2012

வெத்தலை வெத்தலை வெத்தலையோ..

இந்த வாரம் நண்பர் வீட்டில் புரட்டாசி ஸ்பெஷல் (தசல்) விருந்து முடியும் பொழுது கொடுத்த வெத்தலையை வேஸ்ட் பண்ண பிடிக்காமல், வெத்தலைக்கு கொஞ்சம் சுண்ணாம்பு இருக்கா என்று கேட்டு, எல்லோரும் வெத்தலைப் போட்டோம். அந்த இரண்டு வெத்தலைக்கே நாக்கு நன்கு சிவந்து விட்டது. நல்ல காரமான வெத்தலையும் கூட. என் பையனுக்கோ அந்த வாடை வந்தாலே மூக்கைப் பொத்திக்கிட்டு ஓடுவான். காரில் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு, சில்லென்ற குளிர் காற்று மூஞ்சியில் பட, நீ ஏன் வெத்தலை போட்டாய் என்று கேட்டுக் கொண்டே வந்தான். அவனுக்காக, அவனிருக்கும் பொழுது பீடா சாப்பிடுவதைக் கூட நிறுத்தி விட்டேன். பூஜைக்கு வைத்த வெத்திலை, வேஸ்ட் பண்ணக் கூடாது, நன்றாக வயிறு முட்டச் சாப்பிட்டதற்கு, வெத்தலை போட்டால் நன்கு ஜீரணமாகும் என்று சொன்னேன். என் கணவர் ஒரு படி மேலே போய், முன்பெல்லாம் தாத்தா, பாட்டிகள் வெத்தலைப் பொட்டி என்று ஒரு சின்ன பெட்டி வைத்திருப்பார்கள். அதில், வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு இருக்கும். வெத்தலையை இடிக்க என்று ஒன்று வைத்திருப்பார்கள். அதில் இடித்து அவர்கள் அதை சாப்பிட, அவர்கள் சாப்பிட்டதை வாங்கி சாப்பிட பேரன் பேத்திகள் வரிசையில் இருப்பார்கள் என்று சொல்ல என் மகனோ, சீ சீ என்று சொன்னான். நான், என் அக்கா, தங்கை, தம்பிகள் எல்லாம், என் பாட்டியிடமிருந்து அதை வாங்கி சாப்பிட சண்டையே போட்டிருக்கிறோம். எவ்வளவு வெள்ளந்தியாக இருந்திருக்கிறோம்! எனக்கு வெத்தலையை இடிக்கும் சத்தம் மிகவும் பிடிக்கும். சாறு வழிய வழிய சாப்பிடவும் பிடிக்கும். நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு அதையெல்லாம் விட்டு விட்டோம்:( பல, மருத்துவ குணங்கள் அதில் இருக்கிறது என்று தெரிந்தும்:(

சிறு குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை, வெத்தலை சாறு எடுத்து, குழந்தை அழுக, அழுக வாயில் ஊற்றுவார்கள். ஜீரணத்திற்கு மிகவும் நல்லது என்று. அதற்குப் பிறகு, பீடா, ஜர்தா என்று பல பெயரில் இளைஞர்களை படுத்தி, சுவர்களை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது:( நேற்றும், ஒரு நண்பர் வீட்டில் போயிருந்த பொழுது அவர் ரோஜா பாக்கு கொடுத்து, வெத்தலையும் கொடுத்தார். இரவு சைனீஸ் உணவு வயிறு முட்டச் சாப்பிட்டதும், மீண்டும் வெத்தலை போட, என் மகனுக்கு மீண்டும் எரிச்சல்.

வெத்தலையிலேயே எத்தனை வகைகள். சிறு வெத்தலை, பெரிய வெத்தலை, கொழுந்து வெத்தலை, கார வெத்தலை என்று. சாப்பிடுபவர்கள் பார்த்து பார்த்து வாங்குவார்கள். மதுரையில், நெல்பேட்டை பக்கம் பெரிய பெரிய பண்டல்களாக வண்டியில் வரும். அதை சிறு வியாபாரிகள் வாங்கிக் கொண்டு போவார்கள். எத்தனை வெத்தலைக் கடைகள், மதுரையில்!

வால்மார்ட் இதையெல்லாம் கூட விற்குமா?

இப்படியே யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, வெத்தலையை வைத்து தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களும் வந்துள்ளன. எனக்குத் தெரிந்து சில..

வெத்தலை வெத்தலை வெத்தலையோ, கொழுந்து வெத்தலையோ, சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ..ரோசாப்பூ ரவிக்கைக்காரி

வெத்தலை போட்ட ஷோக்குலே தான்..அமரன்

கொட்டைபாக்கும் கொழுந்து வெத்தலையும்..நாட்டாமை

என்று இன்னும் பல பாடல்கள்  ..

3 comments:

  1. Yeah,i have seen my grandma having variety of beautiful vethillai potties in silver :-) i remember a old lady working in granny 's house.avanga eppovum vethiilai pakku sunnambu ellame edichu sappiduvanga.Ann than athe edicts kuduppennu Adam panni...ethana thadavai educhirukken...anthe sound ,colour ,texture ...wow pleasant experiences..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...