கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற்கும் துணிந்து விட்டார்கள். அப்படிப்பட்ட பாவச்
என்று மசாலாப் பொருட்களில் கலப்படம் என்று அறிந்தேனோ அன்றிலிருந்து இன்று வரை முடிந்த வரையில் வீட்டிலேயே மிளகாய், மிளகு, மசாலாப்பொருட்களைச் செய்ய ஆரம்பித்து விட்டேன். மொரோக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த மஞ்சள் தூள் அத்தனை வாசமாக 'கொரகொர'வென்று பார்த்தாலே தரமாக இருந்தது. நம்மூர் மஞ்சள்தூள் பச்சரிசி மாவில் மஞ்சள் நிறமியைச் சேர்த்தது போல அத்தனை நைசாக இருக்கும். வீட்டிலேயே அரைத்த மிளகாய்த்தூள் என்றுமே கடை மிளகாய்த்தூள் நிறத்திற்கு வந்ததே கிடையாது. அத்தனை சிவப்பாக இருக்கிறது கடைகளில். மிளகுத்தூளும் அப்படியே. மசாலாப் பொருட்கள் தேவைப்படும் பொழுது உடனுக்குடன் வேண்டிய அளவிற்குச் செய்து கொள்வது நல்லது.
வாயில் நுழையாதப் பெயர்களில் புதுப்புது நோய்கள் வரும் காலத்தில் நாம் தான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.
ஸ்வராஜ்யாவில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். புரியும். வியாபாரிகள் தெரிந்து கலப்படம் செய்கிறார்கள் என்றால் தாவரங்களில் சில பூஞ்சைகளால் ஆபத்து. அதை நம்மால் இனம் காண முடியாது. முறையாக கண்காணித்து வந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடக்கும் நிலையில் நுகர்வோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment