தாமஸ் சாவேஜின் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தின் பெயரும் 'தி பவர் ஆஃப் தி டாக்'. பண்ணை வைத்திருக்கும் இரு சகோதரர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் மொண்டானா மாநிலத்தில் நடப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தாலும் திரைப்படத்தை நியூஜிலாந்தில்எடுத்துள்ளார்கள். பிரம்மாண்ட மலைக்காட்சிகள், சமவெளிப்பரப்புகள் என்று திரை முழுவதும் பரவி நிற்கும் அழகுக்கே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
கதாநாயகன், 'தி கொரியர்' பட நாயகன். பார்வையிலேயே கோபம், தாபம், அதிகாரம் என மிரட்டலாக நடித்திருக்கிறார். 1920களில் மொண்டானாவில், சகோதரர்கள் ஃபில் மற்றும் ஜார்ஜ் பர்பேங்க் (பெனடிக்ட் கம்பெர்பாட்ச் மற்றும் ஜெஸ்ஸி பிளெமன்ஸ்) பணக்கார பண்ணை உரிமையாளர்களின் கதையில் ரோஸ் என்ற கணவனை இழந்த பெண்மணியும் அவளுடைய மகனும் வருகிறார்கள். ஒருவிதமான மூடுமந்திரமாகவே படம் செல்கிறது. ரோஸை திருமணம் செய்து ஜார்ஜ் வீட்டிற்கு அழைத்து வந்ததை விரும்பாத ஃபில் பார்வையாலேயே அவளையும் அவள் மகனையும் அச்சமூட்டுகிறார்.
"தந்தையின் இறப்பிற்குப் பிறகு தாயின் மகிழ்ச்சியே தனக்கு முக்கியம். அதற்காக அவளுக்கு உதவிகள் செய்வேன்" என்று மகன் துவக்க காட்சியில் கூறுவது தான் ஒன்லைனர் என்று நினைக்கிறேன். ஃபில்லின் கடந்த கால வாழ்க்கையை ரோஸின் மகனுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நெருக்கமாக பழகுவதைப் பார்த்து தவிக்கும் ரோஸிற்கு குடிப்பழக்கமும் தொடர்கிறது. வெளியில் முரட்டுத்தனமாக இருந்தாலும் ரோஸின் மகனைத் தைரியசாலியாக தனக்குத் தெரிந்த வித்தைகளைக் கற்றுத் தருகிறான் ஃபில். முடிவை பார்வையாளர்களுக்கே விட்டு விட்டார்கள்😎
ஒவ்வொரு காட்சியமைப்பும் வசனங்களும் செதுக்கியதைப் போல அருமை.
மெதுவாக சென்றாலும் ஆழமான படம். நெட்ஃப்ளிக்ஸ்ல் காணலாம்.
மெதுவாக சென்றாலும் ஆழமான படம். நெட்ஃப்ளிக்ஸ்ல் காணலாம்.
No comments:
Post a Comment