முகபாவனைகளும் உடல்மொழியும் ஒருவரின் பேச்சை துல்லியமாக மற்றவரிடத்தில் கடத்தி
விடும். ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் ஈமோஜிக்கள் அப்பணியைச் செவ்வனே செய்கிறது. என்ன?
ஏற்கெனவே தப்பில்லாமல் சேர்ந்தாற்போல நாலு வார்த்தை எழுதத் தெரியாதவர்களும்
பொருத்தமான ஈமோஜியைப் போட்டு விட்டு சொல்ல வந்ததைச் சொல்லி விட முடிகிறது.
"நான் ஒன்று சொல்ல வேண்டும். சரியான ஈமோஜி தான் கிடைக்கவில்லை" என்ற புலம்பல்களும்
கேட்கத்தான் செய்கிறது😜 இன்னும் நிறைய ஈமோஜிக்கள் வேண்டும்ம்ம்ம்ம்🙂
சீரியசாக சொல்லிவிட்டு சிரிப்பு ஸ்மைலியைத் தட்டி விட்டு சிரிப்பு போலீஸாகி
தப்பித்துக்கொள்பவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
வார்த்தைகளில் உணர்வுகளை முற்றுப்புள்ளியாக்கிய ஈமோஜியை கொண்டாடும் நாள்😜😂🙂
Happy Emoji Day! (ஜூலை 17)
No comments:
Post a Comment