Friday, November 11, 2022

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்

சிறுவயதில் இருந்தே கோபுரங்களை வேடிக்கைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கழுத்தை வளைத்து உயர்ந்த மீனாட்சி அம்மன் கோபுரங்கள் அதுவும் தெற்கு, மேற்கு கோபுரங்களைப் பார்க்க அத்தனை கடவுள் உருவச்சிலைகள் வண்ணங்களுடன் இருக்கும். ஆனால், ஓரளவுக்கு மேல் தெரியாது. அதை விட கோபுரத்தின் உச்சியில் இருக்கும் யாளியின் உருவம் கீழிருந்து பார்க்கும் பொழுதே பெரிதாக தெரியும் என்றால் உச்சியில் எத்தனை பெரிய உருவமாக இருக்கும் என்று யோசித்ததுண்டு.

தெற்கு கோபுரத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட சுதைச்சிற்பங்கள் இருப்பதாக அறிந்து கொண்டேன். சமீபத்தில் கேமரா உதவியால் பார்க்கையில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களைப் பற்றி யாரவது எழுதியிருந்தால் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கூடியுள்ளது. அப்படி ஏதாவது புத்தகம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி.

படங்களுக்கு மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்



 

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...