Saturday, July 18, 2026

பிரிவு

சில பிரிவுகள்
வயதைக் கேட்பதில்லை.

சில மரணங்கள்
காலத்தின் கதவைத் தட்டுவதில்லை.

ஒருவர் மறைவது
ஒரு உயிரோடு நின்றுவிடுவதல்ல.

ஒரு தாயின் இதயத்தில்
ஒரு மூச்சு குறைவது.

ஒருதந்தையின் கண்களில்
மறைக்கமுடியாத வெறுமைபிறப்பது.

நாளைய கனவுகள்
ஒரேநொடியில் சிதறிப்போவது.

பதில் சொல்லமுடியாத
ஒருமௌனம் வீட்டுக்குள் குடியேறுவது.

மரணம்
ஒரு மனிதரை மட்டுமே அழைத்துச் செல்கிறது.

ஆனால்...

அவரை நேசித்த
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்


ஒரு சிறு பகுதியை
தன்னோடு எடுத்துச் செல்கிறது.

இறைவன்
ஏன் சிலரை இவ்வளவுசீக்கிரம் அழைக்கிறான்


என்பதை
மனிதன் அறிய முடியாமல் இருக்கலாம்.

அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகள் மட்டும் 

மரணத்தை வென்று
வாழும்.

No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

18 வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்றிருந்த பொழுது கோபுர...