ஜூன் 19 நாளை "ஜூன்டீன்த்" என தேசிய விடுமுறையாக 2021ல் அதிபர் ஜோ பைடன் அறிவிப்பதற்கு முன்னரே 2020ல் நியூயார்க் மாநில கவர்னர் குவோமோ அறிவித்து விட்டார். அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழித்த தினமாக இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அப்படி முற்றிலும் ஒழிந்து விட்டதா? பெயரளவில் தான் என்பது அதிபர் முதல் அனைவருக்கும் தெரியும். இனவெறி வெள்ளையர்களின் மனதில் இருக்கும் நிறபேதம் இன்றும் மாறவில்லை என்பதை சமீபத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அறிவுறுத்துகிறது. இந்த நிலைமையும் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விடுமுறை நாள் அறிவிப்பே இத்தனை வருடங்களுக்குப் பிறகு தான் சாத்தியமாகியிருக்கிறது! என்ன தான் அமெரிக்கா ஒரு முன்னேறிய நாடக தன்னை பறைசாற்றிக் கொண்டாலும் மூட நம்பிக்கைகளும், பெண்ணடிமைத்தனமும், நிறபேதங்களும் கொண்ட பிற்போக்கு நாடு என்பதை சமீப கால நடப்புகள் மூலம் உலகமும் அறிந்து கொண்டு தான் வருகிறது.
சில மாநிலங்களில் பள்ளிப்பாடப் புத்தகங்களில் இருந்து இந்த அடிமைத்தனத்தைப் படிப்பதால், ஆசிரியர்கள் அடிமைகளைப் பற்றிப் பேசுவதால் மாணவர்கள் வருந்துவார்கள் என்ற சில்லறைக் காரணிகள் கூறப்பட்டாலும் உண்மையான வரலாற்றை மறைத்து விடத்துடிக்கும் வெள்ளையர்களின் சர்வாதிகார போக்கே இதில் தென்படுகிறது. கடந்த கால வரலாறை முறையாக அறிதலே நேர்மையான சமூதாயத்தை உருவாக்கும். பொய்யும் புரட்டும் அவரவர் வசதிக்காக மட்டுமே. அலாஸ்கா, அரிசோனா, ஃபுளோரிடா, டெனிஸீ, விஸ்கான்சின் மாநிலங்களில் இந்நாளுக்கான விடுமுறையும் இல்லை. இதுதான் அமெரிக்கா.
1863ல் அடிமைகளே இருக்க கூடாது. அனைவருக்கும் விடுதலை வழங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டாலும் டெக்சாஸ் மாநிலத்தில் 1865ல் தான் கடைசி அடிமைக்கூட்டம் விடுதலை பெற்றது. வலிகள் நிறைந்த இந்த வரலாற்று நாளைக் கொண்டாடத்தான் இந்த விடுமுறை தினம்.
கறுப்பர்களுக்காக கொண்டாடப்படும் தினம் என்று கூறினாலும் இந்த விடுமுறையிலும் அவர்களில் பெரும்பாலோனோர் வேலைக்குச் சென்ற தினமாக தான் இருந்திருக்கும். அவர்கள் சார்பில் மற்றவர்கள் விடுமுறையைக் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை😔
இந்த நாளில் கறுப்பின மக்களின் அடிமை வரலாற்றை நம் குழந்தைகளுடன் உரையாடலாம். அதன் தொடர்பான ஆவணப்படங்களைக் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கலாம். வெறுப்புணர்வுக்குப் பதிலாக நல்ல புரிதலுணர்வு வர அமெரிக்காவில் வளரும் நம் குழந்தைகளும் அமெரிக்காவின் இருண்ட கால வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)
'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?
இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
ரயில் பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை என்றாலும், குழந்தைகள், கணவர், அப்பா, அம்மா, தம்பியுடன் பலமுறை சென்னை-மதுரை பயணம் செய்திருந்தால...
No comments:
Post a Comment