புகைப்படங்களில் திரும்பிப் பார்த்தபடி சிரிக்கிறார்கள்
கையில் முகம் ஊன்றிச் சிரிக்கிறார்கள்
மேலே பார்த்துச் சிரிக்கிறார்கள்
தலை குனிந்தபடி சிரிக்கிறார்கள்
காமிராவைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்
கும்பலில் சிரிக்கிறார்கள்
கண்ணை மூடிச் சிரிக்கிறார்கள்
எவ்வளவு நல்லவர்கள்
எவ்வளவு புத்திசாலிகள்
-பேயோன்
No comments:
Post a Comment