Thursday, October 30, 2025

சரிகமப...

'ஜீ' தொலைக்காட்சியின் ‘சரிகமப’ பாட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்காந்த் நினைவாக அவர் படத்தில் வந்த பாடல்களைப் போட்டியாளார்கள் பாடுகிறார்கள். இவருடைய படங்களும் சரி, பாடல்களும் சரி மதுரையில் அத்தனை பிரபலமாக பட்டி தொட்டிகளில் ஒலித்துக் கொண்டிருந்த காலமும் இருந்தது.

மதுரையிலிருந்து விஜய்காந்த், பாண்டியன், வடிவேலு வரிசையில் பிரபலமாகி அரசியலுக்குள்ளும் நுழைந்து ஜெயாம்மாவை எதிர்த்தவர். அவரை நேர்மையுடன் எதிர்த்த ஒரே அரசியல்வாதி என்று கூட கூறலாம். மற்ற திராவிடக்கட்சியினர் வாலைச் சுருட்டி இருக்குமிடம் தெரியாமல் பதுங்கி இருந்தனர். அன்னாரின் அரசியல் வளர்ச்சியை வெறுத்த சில்லரைகள் அவரை எத்தனைக்கெத்தனை கேவலப்படுத்த முடியுமோ அத்தனை கேவலப்படுத்தியது வரலாறு.
 
தேச பக்திப் படங்களாகாட்டும், புரட்சிப் படங்கள் ஆகட்டும் சிவந்த கண்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்ட காட்சிகளுக்காகவே பிரபலமானவர். கடைசிக்காலத்தில் அவரை கோமாளியாக்கி விட்டார்கள். பாவம்!

அவர் அரசியலில் நிலைத்து இருந்திருந்தால் மாற்றுக்கட்சியாக இருந்திருக்கலாம். ஆனால் சில்லரையைச் சிதற விடுபவர்கள் விட்டுவிடுவார்களா? இறந்தபிறகு ‘கருப்புத்தங்கம்’ என்று புகழ்பாடுகிறார்கள்.
உண்மையிலேயே மனித குணங்களுடன் இருந்திருக்கிறார். அவர் படங்களை அதிகம் பார்த்ததில்லை என்றாலும் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். அதுவும் இசைஞானி உச்சத்தில் இருந்த காலத்தில் வெளிவந்த பாடல்கள்!

போட்டியாளார்கள் மகிழன், முகேஷ், அமன், சௌம்யா அருமையாகப் பாடி கோல்டன் ஷவர் வாங்கினார்கள். இன்னும் எனக்கு மிகவும் பிடித்த விஜய்காந்த் படப்பாடலை யாரும் பாடவில்லை. நாளை யாராவது ஒருவர் பாடுவார்கள் என்று காத்திருக்கிறேன்.

கிடாரும் புல்லாங்குழலும் தான் இளையராஜாவின் பாடல்களில் தனித்துக் கேட்கும். அத்தனை சுகம்

அது சரி. இப்ப கீர்த்தி சுரேஷ் பாடலைன்னு யார் அழுதா? கொடுமைடா சாமி
 

No comments:

Post a Comment

கொசுத்தொல்லை தாங்கலைடா மாதவா

சமீபத்தில் வாசித்த செய்தி ஒன்று. கூகுளின் உயிரியல் அறிவியல் (Life Sciences) பிரிவான Verily, அடுத்த இரண்டு ஆண்டுகளில் கலிஃபோர்னியா & ஃப்ள...