தேவையற்ற பாடல் காட்சிகள். பாவம் ஒட்டாத கதையில வேற என்னத்த பண்ண முடியும்? எனக்கென்னன்னு செலவழிச்சிருக்காங்க. ஊழல் பணம் படுத்தற பாடு இந்த கண்றாவில்லாம் படமா வருது. முற்போக்கு பெண்கள் என்றால் குடி, புகை என்றிருக்க வேண்டும் தீராவிடம் என்றால் பிராமணரை இழிவுப்படுத்த வேண்டும். அதற்கேற்றாற்போல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் சில காட்சிகள்.
இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள். கல்லூரி காலத்திலிருந்து ஒரு தலைக் காதலைச் சுமந்து கொண்டு இன்று வரை அலைபவர்கள் ஒரு முறையேனும் தங்களுடைய காத்லைச் சொல்லிவிட மாட்டோமோ என்று கல்லூரி கெட்டுகதர்களுக்குப் போகிறார்கள். அவனும் சொல்லிவிட மாட்டானா என்று பெண்களும் ஒன்றும் தெரியாத மாதிரி செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் காலமிது. ஒருவேளை, அவர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ?
ஒரு காதல் முறிந்தவுடன் அடுத்த காதலை நோக்கி் நகர்ந்து கொண்டேயிருக்கும் தலைமுறை இது. இப்ப போய்🥱🥱🥱
“அய்யோ கொல்றாங்களே” அன்றே அலறினார் ஒருவர். அவர் பேரன் பலரையும்😏😏😏
மொக்கையிலும் மொக்கை சூர மொக்கை ‘இதயம் முரளி’ படம்.
😆😆😆
மனசு கேட்கலைன்னு அடுத்தநாள் ‘நூறுசாமி’ன்னு ஒரு படம். உண்மையில் நடந்த கதை. என்னதான் இந்த மண்ணு, அந்த மண்ணெண்ணெய்னு சொன்னாலும் கணவனை இழந்தப் பெண்களின் மறுமணம் என்பது இன்னும் சமூக அவலமாகவே பார்க்கப்படுகிறது. கௌரவக்கொலை வரைக்கும் செல்கிறது! கொடுத்த கதாபாத்திரத்திற்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார் சுவாசிகா. இளம்வயதில் கணவனை இழந்தப் பெண்களைப் புரிந்து கொள்ளாத சமூகம். ஏக்கமும், பொறுப்புகளும், ஏச்சுபேச்சுகளைச் சுமக்கும் பெண்களுக்குப் பெண்களும் எதிரிகளாக இருப்பது சாபம். கடைசி சில நிமிடங்களே வந்தாலும் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் இப்பேர்ப்பட்ட ஆண்களும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறது. ஆணினத்தால் ஏற்பட்ட அவலத்தை ஆணினம் தான் சரி செய்யணும். அப்படி ஒரு சாமி முன்வந்த கதை. பார்க்கலாம்.🙂🙂🙂
No comments:
Post a Comment