அதாகப்பட்டது, ஜப்பான் நாட்டின் சிபா மாகாணத்தில் உள்ள Ichikawa City Zoo and Botanical Garden விலங்குக் காட்சிச்சாலையில் சமீபத்தில் பிறந்த குட்டிக் குரங்கு தான் பாஞ்சி. ஜப்பானின் குளிர்ந்த மலைப்பகுதிகளில் வாழும் Japanese macaque இனத்தைச் சேர்ந்த பனிக்குரங்கு. ஆனால் பாஞ்சியின் வாழ்க்கை பிறந்த முதல் நொடியில் இருந்து சாதாரணமாக அமையவில்லை.
பாஞ்சி பிறந்த சில நேரங்களிலேயே அவன் தாயால் கைவிடப்பட்டான். குரங்குகளின் உலகில் இது அரிதான சம்பவம். தாயின் மார்பில் ஒட்டிக்கொண்டு பாதுகாப்பு பெற வேண்டிய வயதில் பாஞ்சி தனிமையில் இருந்தான். பெரிய குரங்குகள் தாக்கவும் விலங்குக் காட்சிச்சாலையின் பராமரிப்பாளர்கள் அவனை உடனே காப்பாற்றினர். பாட்டிலில் பால் ஊட்டி, இரவும் பகலும் கவனித்துக் கொண்டனர். தனிமையில் வாடிய பாஞ்சி அடிக்கடி அழுதான். தாயின் உடல் வெப்பம் இல்லாத வெறுமையை உணர்ந்தான். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக பராமரிப்பாளர்கள் ஒரு மென்மையான சிறிய ஆரங்குட்டான் பொம்மையைக் கொடுத்தனர்.
அதை அவன் இறுக்கமாகத் தழுவிக் கொண்டான். அது வெறும் பொம்மை இல்லை. அவனுக்கு அது தாயின் மார்பு. பாதுகாப்பு. ஆறுதல்.எல்லாமே.
அவன் தூங்கும்போதும் அதையே பற்றிக் கொண்டிருந்தான். நடக்கும்போதும் அதை எடுத்துச் சென்றான். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதும் உலகம் முழுவதும் மக்கள் மனம் உருகினர்.
ஒரு சிறு குரங்கு, ஒரு பொம்மையை தழுவி அமைதியைத் தேடும் காட்சி மனிதர்களின் இதயத்தை ஆழமாகத் தொட்டது. பாஞ்சியின் வீடியோக்கள் வைரலானபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவனைப் பார்க்க விலங்குக் காட்சிச்சாலைக்கு வந்தனர். பலர் அவனுக்காக வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள், ஊக்கச் செய்திகள் அனுப்பினர்.
மனிதர்களால் வளர்க்கப்பட்ட குட்டிகள், தங்கள் இனத்தவருடன் பழக சற்றுக் காலம் எடுத்துக்கொள்வது இயல்பு. பாஞ்சியும் அதைப் போலவே மெதுவாக மற்ற குரங்குகளுடன் பழகத் தொடங்கினான். முதலில் அவனை ஒரு பொருட்டாக குரங்குகள் கூட்டம் மதிக்கவில்லை. அவனைத் துன்புறுத்த, வேகமாக ஓடி வந்து பொம்மையிடம் தஞ்சம் புக, இப்படியே பல நாட்கள் சென்றது. இறுதியில் ஒரு குரங்கு அவனுக்குத் தாயாக அரவணைத்துக் கொள்ள எல்லாம் சுபம். மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட... இன்றும் அவனைப் பற்றின படச் செய்திகளுடன் தான் நாட்கள் நகர்கிறது.
அவன் மெதுவாக சமூகத்தின் ஒரு அங்கமாக மாறிக் கொண்டிருக்கிறான்.
அவன் ஒரு சாதாரண குரங்கு அல்ல. "பாசம் இன்றி எந்த உயிரும் முழுமையில்லை" என்ற உண்மையை உலகுக்குக் கூறும் ஓர் உயிர்.
பாஞ்சியின் கதை ஒரு விலங்கு சம்பவம் மட்டுமல்ல. அது மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு. குழந்தை பிறக்கும் போது அது தாயை முழுமையாக சார்ந்திருக்கும். தாயின் தொடுதல் பாதுகாப்பை உருவாக்கும். பாசமின்றி வளர்ச்சி முழுமையடையாது. தனிமை உயிரை சிதைக்கும். ஒரு சிறிய ஆறுதல் கூட வாழ்க்கையை தாங்கும் வலிமை தரும்.
அதனால் தான் பொம்மை கூட அவனுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தந்ததால் தான் யாரையும் தொடவிடாமல் தூக்கிக் கொண்டு அலைகிறான்.
மனிதர்களும் அப்படித்தானே?
நாம் அனைவரும் ஏதோ ஒன்றைத் தழுவி வாழ்கிறோம். அது நமக்கு "நீ தனியாக இல்லை" என்று உணர்த்துகிறது.
அதனால் தான் பொம்மை கூட அவனுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தந்ததால் தான் யாரையும் தொடவிடாமல் தூக்கிக் கொண்டு அலைகிறான்.
மனிதர்களும் அப்படித்தானே?
நாம் அனைவரும் ஏதோ ஒன்றைத் தழுவி வாழ்கிறோம். அது நமக்கு "நீ தனியாக இல்லை" என்று உணர்த்துகிறது.
பாஞ்சி இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய பயணம் தொடர்கிறது. ஆனால் அவன் ஏற்கனவே உலகுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுத்துவிட்டான்:
உறவு இல்லாமல் உயிர் இல்லை.
பாசம் இல்லாமல் பாதுகாப்பு இல்லை.
தொடுதல் இல்லாமல் நம்பிக்கை இல்லை.
ஒரு சிறு குரங்கு , ஒரு மென்மையான பொம்மை , ஒரு உலகளாவிய உண்மை, கூத்தாடுகிறது இணையம்.
No comments:
Post a Comment