Wednesday, June 28, 2023

மலேரியா


அங்கன இங்கன கடிச்சுக்கிட்டிருந்த கொசுவுக்கு இப்ப அமெரிக்க ரத்தத்தையும் குடிக்க ஆசை வந்துருச்சு. டெக்சாஸ், ஃபுளோரிடா மாநிலங்களில் மெதுவாக ஆரம்பித்திருக்கிறது "மலேரியா" காய்ச்சல். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு மலேரியா காய்ச்சல் தலைகாட்ட ஆரம்பித்திருப்பது தான் பிரச்சினையே! நல்லவேளை! பள்ளிகள் கோடைவிடுமுறைக்காக மூடப்பட்டுள்ளது. இப்பொழுது வரை ஒற்றை எண்களில் தான் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கோடையில் அதிக மக்கள் உலகநாடுகளுக்கு விடுமுறைக்குச் செல்வது வாடிக்கை. அதனால் இந்த எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது என்று அமெரிக்காவின் 'நோய் கட்டுப்பாட்டு மையம்' எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கும் ஒரு ஊசியைக் குத்திக்கொள்ளுங்கள் என்று ஆரம்பித்துவிடுவார்களோ? பயமாக இருக்கிறது😑

உலகத்தின் எந்த மூலைக்கு ஓடிப்போனாலும் தொடர்ந்து வருவேன்னு நம்மைப் பின்தொடர்ந்து வருது கொசுக்கள். எதுக்கும் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க மக்கா! இப்ப இது, அப்புறம் ஃப்ளூ காய்ச்சல் நடுநடுவில கொரோனான்னு ஆயிடுச்சு நம்ம வாழ்க்கை😐

என்னவோ போடா மாதவா!


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...