Wednesday, December 22, 2021

புலம்பெயர்ந்தவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - மகளின் பார்வையில்

இன்று உலகின் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த பல மக்கள் அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்தோடு ஒட்டவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் தங்களையும் குழப்பி தங்கள் குழந்தைகளையும் குழப்பிக் கொண்டு வளர்க்கிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே. அவர்களுக்கு வீட்டின் உள்ளும் வெளியேயும் என இரு வெவ்வேறு உலகங்கள். பெற்றோர்களை விட அதிகளவில் வெளியுலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தங்களை அந்நிய உலகில் இருத்திக் கொள்ள பாடுபடுகிறார்கள். பெற்றோர்களாக நல்லது கெட்டது எடுத்துச் சொல்லும் கடமை நமக்கிருக்கிறது. அதே சமயத்தில் குடியேறிய நாட்டின் கொண்டாட்டங்களில் பங்கு கொண்டு குழந்தைகள் பங்குபெறுவதையும் தடை செய்வதில் நியாயம் இல்லை. அப்படி நினைப்பவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவே கூடாது. இங்கு பலரின் குழந்தைகள் பெற்றோர்களின் எதிர்ப்புகளால் ஒருவித மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள். இது சரியா? தவறா? என்று சிந்திக்க வேண்டும். தவறு என்றால் எப்படி திருத்திக் கொள்வது என்று நம்மை நாமே பரிசீலித்துக் கொள்ள வேண்டும். 

வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பலரும் கிறிஸ்துமஸை வெறும் பரிசுப்பொருட்கள்  கொடுத்து மகிழும் நாளாக, நண்பர்கள், குடும்பங்களுடன் இணைந்து உண்டு மகிழும் தினமாக தான் கழிக்கிறார்கள். வயதானவர்களும் வெகு சில அமெரிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் மட்டுமே தேவாலயத்திற்குச் சென்று வருகிறார்கள். பெரும் நிறுவனங்களும் தங்கள் லாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் விதமாக இந்த கொண்டாட்டத்தை முன்னிறுத்துகிறது. அதை உலகம் முழுவதும் நிறுவ பார்க்கிறது. இந்தியாவில் கிறிஸ்தவர் அல்லாதோர் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பள்ளிகளில் குழந்தைகளை வற்புறுத்துவதாக கேள்விப்படுகிறேன். இது தவறு. கண்டிக்கத்தக்கதும் கூட.

என் மகள் அவளுடைய கல்லூரி செய்தித்தாளில் கட்டுரைகள் எழுதுவது வழக்கம். கல்லூரிக்குள்ளே நடக்கும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் எண்ணங்கள், கல்லூரி நிர்வாகத்தின் குறைபாடுகள், வெளியுலகில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று எழுதியுள்ளாள். அதில் மிகவும் கவனம் பெற்றது இந்த கட்டுரை.  எங்களுக்கு மிகவும் பிடித்ததும் கூட. புரிந்துணர்தலில் தான் வாழ்க்கையின் அடிநாதமும் அனுபவமும். 

அமெரிக்காவில் சேர்ந்தாற் போல விடுமுறை என்பது தேங்க்ஸ்கிவிங், கிறிஸ்துமஸ் விடுமுறையில் மட்டுமே கிடைக்கும் அரிய நாட்கள்.  குழந்தைகளும் வீட்டிற்கு வந்து தங்கிச் செல்வதால் பலரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் இனிமையான நாட்கள். எங்களைப் பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் என்பது விடுமுறைக் கொண்டாட்டம் மட்டுமே. இதில் மதம் என்ற கேள்விக்கே இடமில்லை. குழந்தைகளுடன் குடும்பமாக அவர்களுக்குப் பிடித்த பொருட்கள் வாங்கிக் கொடுத்து உணவுகள் உண்டு அளவளாவி மகிழும் விடுமுறை. அவ்வளவே!

My daughter was an assistant editor of her college newspaper, 'The Statesman'.  She had been regularly contributing articles.  This one appeared relevant to me for most of us NRIs. 

Here is her typescript: 

What I see as a point of immense frustration are people who move to a new world and refuse to adapt and assimilate themselves into that new culture. As a first generation immigrant, I can tell you that moving across the world to a place where you don’t know the first thing about anything is an overwhelming experience. It gets better when you learn to speak the language of the people surrounding you. It becomes easier when you adopt basic mannerisms and avoid accepted faux paus of the new society. And it finally becomes fun when you get to participate in the festivities of the new culture – for instance, celebrating Christmas, even if you’re not Christian.  

This rings even more true for families. As a first-generation child of an immigrant family, I am well aware of the difficulties kids face in a brand new environment.  Sure, it is a continual adjustment process, one that might take years. My parents made the effort to have a fancy sit-down dinner for our first Thanksgiving, and it was an experience that I was able to share with the other kids in my class.  It created a common ground between me and my classmates. When my parents made the effort to read up on stories of Santa Claus, tell them to me, and create that belief – it built the bridge to make friends with other like-minded six-year-olds. Opening my presents on my first Christmas is a day that I haven’t forgotten. 

It’s important to point out that I believe that Christmas is a secular holiday. 
Commercialization has had a greater impact than just fattening the pockets of businesses – it is the sole reason that Christmas, and even Easter to an extent, can even be thought of as secular. Right now, these holidays are not events just pertain to Christians, because they’re losing that religious aspect. Christmas is now embodied by a fat man dressed up in a red outfit giving gifts to children. Christmas is about finding that perfect gift to give every single member of your family, and that one person at work whose name you drew in “secret Santa.” So celebrate Christmas, regardless of what cultural background you’re from! Create an egg hunt in your backyard and eat chocolate bunnies on Easter. If you find yourself in Germany – drink during Oktoberfest. If you’re in Japan, follow the customs of Valentine’s day and White day. Doing so provides an insight into the life of a different culture. It’s how you learn and experience a different world first-hand. 

Yet I still interacted with people in high school who weren’t given gifts because of their cultural background, and were not allowed to partake in the social festivities. I met people who have never celebrated a single birthday because it wasn’t something their parents did when they were younger. The concept of birthday parties was a foreign idea, and instead of adopting it and trying it, it was shunned. There were students who weren’t allowed to go to school dances or prom because it was deemed “inappropriate.” 

I am by no means arguing that moving to a different country requires that abandon your roots. My parents have raised me the way they were raised – they brought me to the temple regularly, they instilled in me the traditional values they grew up with, etc. Maintaining that identity is important – it holds you to the world you came from. It betters your current environment by creating diversity within the population. But there are people who won’t partake in the festivities at all, and I think that hurts more than it helps. 

Because once you move to a different country, or even a different city, you make the decision to become a new person, influenced by both worlds. It’s important to remember where you come from, but it’s equally as important to experience and live in the new life that you have created. It is an extraordinary opportunity to get to live in multiple cultures at once– and it gets more fun when you really learn to celebrate all of them.

No comments:

Post a Comment

கலப்படம்

கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற...