Friday, December 17, 2021

மாதங்களில் அவள் மார்கழி 2

முதற் பாடலில் கண்ணனை நோன்பிருந்து வணங்க, விடியலில் தோழிகளை எழுப்புகிறாள் ஆண்டாள். இரண்டாவது பாடலில் பரந்தாமனின் திருவடிகளை அடைய எப்படி நோன்பிருக்க வேண்டும் என்று கூறுகிறாள். நெய், பால் சேர்க்காமல் அதிகாலையிலேயே நீராடி, தீய சொற்கள், தீய பேச்சுக்கள் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமல் இல்லாதவர்களுக்குத் தர்மம் செய்ய வேண்டும் என்று போதிக்கிறாள். வையத்து வாழ்வீர்காள் என்று ஆரம்பமே என்ன ஒரு அழகு! 'பாவை நோன்பு' என்பது இளம்பெண்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பு. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர்.




No comments:

Post a Comment

கர்மன்

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் நாம், நம் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய பலன்களைப் பொறுத்தே அமைகிறது. முற்பிறவிப்பலனைத் தான் ...